இந்த படத்தின் அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்தனர். பின்னர் 1,2,3 தேதிகளில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் உறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டது.
அந்த வகையில் இந்த் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது, அதே போல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருபாதகவும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பிரபல டிக்டாக் ஸ்டார் அமலா ஷாஜி நடிப்பதாக தற்போது ஒரு தகவல் உலா வந்துகொண்டு இருக்கிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியா அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அடைவதற்கு 2K கிட்ஸ் தான் காரணம் என்று சொல்லலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் Ttf எனப்படும் யூடுயூப் பைக் ரேசருக்கு குவிந்த கூட்டத்தை கண்டு 90ஸ் கிட்ஸ்களை ஆச்சரியத்தால் ஆழ்த்தியது.
Ayyo Venaam Venaam please 🙏🏻🙏🏻 iva venave Venaam please 🥺💔
— Joy.Jr 🇧🇷💛💫 (@Itzmejoyjr) February 1, 2023
அந்த வகையில் 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழ்பவர் அமலா ஷாஜி. பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார் அமலா ஷாஜி.டிக் டாக்கின் மூலம் அமலா ஷாஜி மக்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால், டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது இவரை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள்.
காலையில் முழிப்பதே அமலா ஷாஜியின் முகத்தில் தான் என்று சொல்லலாம். பின் இன்ஸ்டாகிராம், மோஜ், யூடியூபில் இவருடைய வீடியோக்கள் எல்லாம் கொடிகட்டி பறக்கிறது. இப்படி ஒரு நிலையில் அமலா ஷாஜி தளபதி 67 குழு படப்பிடிப்பிற்காக விமான நிலையில் சென்ற அதே நாளில் , தானும் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு ‘அது நடந்துகொண்டு இருக்கிறது.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
அமலா ஷாஜியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதி 67ல் நடிக்கிறீரகளா என்று கமெண்டுகளை போட துவங்கி விட்டனர். அந்த வகையில் அமலா ஷாஜியின் பாலோவர் ஒருவர் ‘தளபதி 67அ இருக்குமோ’ என்று கமன்ட் செய்து இருக்கிறார். அந்த கமெண்டை அமலா ஷாஜி pin செய்து இருப்பதை பார்த்து டென்சன் ஆன விஜய் ரசிகர்கள் பலரும் ”ஐயோ வேண்டாம்’ என்று புலம்பி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் ‘நீ மட்டும் ஸ்க்ரீன்ல வந்த ஸ்க்ரீன கிழுச்சிடுவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Aiyaiyoooo pic.twitter.com/rlR4fWyWCP
— Richard Andrew (@RichardAndrew_) February 1, 2023
ஏற்கனவே இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு இலங்கை பெண் ஜனனி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், இது குறித்த தகவலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியின் போது ஜனனியும் கூறி இருந்தார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் அமலா ஷாஜியும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை கேட்டு நாலு பேர் நான்கு விதமாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.