அமரன் ‘100-வது’ நாள் வெற்றி விழா : கமல்ஹாசன் செய்த வேலையால் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள், முழு விவரம் இதோ

0
132
- Advertisement -

அமரன் படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசன் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ராஜ்குமார் பெரியசாமியும் ஒருவர். இவர் முதன் முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். தளபதி விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் இவர் துணை இயக்குனராக பணி புரிந்திருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கூன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தயாரித்து இருந்தார். கௌதம் கார்த்திக் மற்றும் சனா மக்புல் நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின் இயக்குனர் ராஜ்குமார் இயக்கிய இரண்டாவது படம் ‘அமரன்’. இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியாகி இருந்தது.

- Advertisement -

அமரன் படம்:

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்திருந்தார்கள். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை:

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது? அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவர் மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி இருந்தனர்.

-விளம்பரம்-

100 நாட்கள் நிறைவு:

மேலும், 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 335 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது. தற்போது இந்த படம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிலையில் இதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் சென்னையில் படக்குழுவினர் நூறாவது நாள் வெற்றி விழாவை நடத்தி இருந்தார்கள். இந்த விழா கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கமல் செய்த செயல்தான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கமல் செய்த வேலை:

காரணம், இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு மீடியாக்களின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், இந்த சக்சஸ் மீட் குறித்து எந்த ஒரு மீடியாவுக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் அழைப்பை விடுவிக்கவில்லை. இதை தான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்கள். கமலஹாசனின் இந்த செயல் பத்திரிகையாளர்களுக்கு அதிருப்தியை
கொடுத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

Advertisement