ஹாலிவுட்டில் இருந்து சுடப்பட்ட ‘அமரன்’ படத்தின் காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்து வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சிந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள்தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமரன் படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Cinematic Parellel 🎬
— RP Studios (@rpstudios__) November 15, 2024
American Sniper (2014)
Dir: Clint Eastwood
Amaran (2024)
Dir: Rajkumar Periyasamy pic.twitter.com/k1Ga6PwfW6
பிரபலங்கள் பாராட்டு:
இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோட ராணுவ வீரர்களுக்கும் இந்த படம் போட்டு காண்பிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் வேலூர் அடுத்துள்ள ராணுவப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அமரன் திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.
காப்பி அடிக்கப்பட்ட காட்சி:
இந்நிலையில், ‘அமரன் ‘ படத்தை ட்ரோல் செய்யும் விதமாக சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது, ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தொலைபேசியில் சாய் பல்லவி இடம் பேசிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் இந்தியன் ஆர்மி மீது தாக்குதல் நடத்துவார்கள். அப்போது, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சாய் பல்லவி பயந்து தன் கணவரை நினைத்து அழுது இருப்பார். அந்த காட்சியை பார்ப்பதற்கு மிகவும் எமோஷனலாக இருக்கும்.
அமெரிக்கன் ஸ்னைப்பர்:
அந்தக் காட்சியைப் போலவே, கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் Clint Eastwood இயக்கத்தில் வெளியான ‘American Sniper’ படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியிலும், கதாநாயகியிடம் கதாநாயகன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடக்கும். அப்போது கதாநாயகி கதறி அழுது இருப்பார் . தற்போது ஹாலிவுட் படத்தின் காட்சியை அமரன் படத்தின் காட்சியோடு ஒப்பிட்டு ரசிகர்கள் ‘காப்பி பேஸ்ட் ‘ என்று அமரன் படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக உள்ளது.