ப்பா, ஆம்பள படத்தில் கிரண் மகளாக நடித்த நடிகையா இது ? வைரலாகும் மாடலிங் புகைப்படங்கள்.

0
1892
Nyra
- Advertisement -

விஷாலின் ஆம்பள படத்தில் நடித்த நடிகை நைரா குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஷால். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. மேலும், இவர் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த லத்தி படம் கலையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று தான் ஆம்பள படம். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஷாலுடன் அன்சிகா மோத்வானி, சந்தானம், ரம்யா கிருஷ்ணன், வைபவ், சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

ஆம்பள படம்:

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்திருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காதல் திரைப்படமாக இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்தது. மேலும், இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கிரண் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நைரா நடித்த படங்கள்:

இந்த படத்தில் கிரணின் மகளாக நடித்தவர் நடிகை நைரா. இந்நிலையில் இவரை பற்றி பலரும் அறியாத தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம். இவருடைய முழு நைரா பானர்ஜி. இவர் முதலில் ஹிந்தி சீரியல்களில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதற்கு பிறகு போலாமா என்ற படத்திலும் நடித்திருந்தார்.

நைரா நடிக்கும் சீரியல்:

அதன் பின் 2016 ஆம் ஆண்டு சன்னி லியோன் நடித்த ஒன் நைட் ஸ்டேண்ட் படத்தில் நைரா நடித்திருந்தார். அதற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான டைகர் என்ற படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இப்படி இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி என்ற தொடர் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement