கால் டாக்சி ஓட்டுனரால் நடிகைக்கு ஏற்பட்ட பகிர் அனுபவம். ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ்.

0
1182
sonam-kapoor
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை சோனம் கபூர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் விளம்பரம் நடிகையும் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு சவாரியா என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகை சோனம் கபூர் அவர்கள் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து உள்ளார். இதனால் நடிகை சோனம் கபூர் அவர்கள் பாலிவுட்டுக்கும், லண்டனுக்கும் அடிக்கடி ஷிஃப்ட் ஆகி வருகிறார். கடந்த ஆண்டு நடிகை சோனம் கபூர் நடிப்பில் வெளியான ஜோயா ஃபேக்டர் மற்றும் ஏக் லட்கி கோ தேக்கா தோ அய்ஸா லேகா ஆகிய படங்கள் வெளியாகின. இந்த ஆண்டும் பிஸியாக புதுப் புதுப்படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சோனம் கபூர் கால் டாக்சியில் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்ததோடும் மட்டுமின்றி, இதை தனது 12.8 மில்லியன் ரசிகர்களுக்கு உபர் டாக்ஸிகளை கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் பயன்படுத்துங்கள் என்றும் அட்வைஸ் செய்து உள்ளார். மேலும், பொது மக்கள் அதிகமாக உள்ளூர் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்து உள்ளார். இது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்போதும் பாலிவுட் படங்கள் ஃபேஷன் ஷோ என்று பிஸியாகவே இருப்பார் வெளி நாடுகளில் பயணம் செய்து கொண்டிருப்பார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். தினமும் தன் வாழ்க்கையில் நிகழும் அனுபவங்களை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்.

இதையும் பாருங்க :லுங்கியில் படு சிம்பிளாக வீட்டில் குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடிய ரோபோ ஷங்கர்.

- Advertisement -

அந்த வகையில் கால் டாக்சியில் செல்லும் போது தனது அனுபவத்தை பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கால் டாக்ஸியில் சிறந்து விளங்குவது உபேர் டாக்சி என்று பலர் கூறுவார்கள். அதனால் உபேர் டாக்சியில் பயணம் செய்தார். பின் உபேர் டாக்சி ஓட்டுநர் மது குடித்து விட்டு, தகாத வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் நடிகை சோனம் கபூர் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஒரு டாக்ஸியில் பயணித்த போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எச்சரிக்கையாக இருங்கள் முடிந்த வரை அனைவரும் மக்கள் கூட்டம் நடமாடும் போக்குவரத்தை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். அது தான் மிகவும் பாதுகாப்பானது. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி உள்ளது. சோனம் கபூர் இப்படி அதிரடியாக ஒரு ட்வீட்டை போட்டதை பார்த்து அலறியடித்த உபர் நிறுவன உயர் அதிகாரிகள் நடந்த சம்பவத்திற்கு சோனம் கபூர் இடம் மன்னிப்பு கேட்டார்கள். அதோடு இந்த மாதிரி இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று உபர் நிறுவன உயர் அதிகாரிகள் கூறினார். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சென்ற வாகனம் குறித்த விவரங்களை ஷேர் செய்யுங்கள் என்று கேட்டு உள்ளனர். அதற்கு சோனம் கபூர் அவர்கள் கூறியது, நான் ஏற்கனவே உங்களிடம் புகார் தெரிவிக்க முயற்சித்தேன். ஆனால், உங்கள் சிஸ்டம் சரியாக இல்லை. ஒவ்வொரு அதிகாரிகளும் தாங்கள் இல்லை என தப்பித்துக் கொள்ளத்தான் பார்க்கிறார்கள். முதலில் அதையெல்லாம் சரி செய்து விட்டு வாங்கள் பிறகு பார்க்காலம். உங்களால் ஏற்கனவே நான் பட்டதே போதும் என விளாசி தள்ளியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement