சிறகடிக்க ஆசை : பணத்தை வைத்து மனோஜ் துவங்க இருக்கும் தொழில் – பணம் பற்றிய விஷயம் தெரியவந்ததா?

0
640
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். போலீசில் ஜீவா பணம் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள். பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார் சிட்டி. அந்த வீடியோவை மீனாவின் தம்பி சத்யா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பிக்கிறார். அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். இன்னொரு பக்கம் வீடியோ முழுவதுமே எல்லோருக்குமே கிடைக்கிறது. பின் முத்து கார் ஓட்டி கொண்டு வரும்போது போலீஸ் அவரை மடக்கி காரை எடுத்து செல்கிறார்கள். முத்து தன் மீது தவறு இல்லை என்று எவ்வளவோ போராடியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

சீரியல் கதை:

வீட்டில் எல்லோருமே முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, முத்துவை அடித்து விடுகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். ஆனால், எந்த போலீஸ்மே அவர் சொல்வதை கேட்கவில்லை. கடைசியில் மீனா சிசிடிவி பதிவுகளை செக் பண்ணி பார்க்கிறார். அப்போது முத்து குடிக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதை செய்தது சிட்டி தான் என்று கண்டுபிடிக்கிறார். இதை அவர் போலீஸில் காண்பித்து முத்துவை காப்பாற்றி வண்டியை மீட்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த உண்மையை சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார்கள். இதை பார்த்து அண்ணாமலை அழுகிறார். நேற்றைய எபிசோட்டில் மனோஜ் செமயா குடித்து தள்ளாடுகிறார். இதை பார்த்து ரோகினி கோபப்படுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், முத்துவின் மொத்த குடும்பமும் பர்னிச்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கு மனோஜ் ஓனர் உட்காரமிடத்தில் உட்கார்ந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி- மனோஜ் இருவரும் தங்களுடைய கடைக்கு பெயர் வைப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி, அத்தை பெயரை வைக்கலாம் என்று சொல்கிறார். மனோஜ், வேணாம் உன்னுடைய அப்பா பெயர் வைக்கலாம் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு உள்ளே வந்த முத்து, அம்மா பெயரை தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுக்கிறார். இனி வரும் நாட்களில் மனோஜ் தன்னுடைய கடைக்கு அம்மா பெயரை வைப்பாரா? மனோஜ் என்ன தொழில் செய்ய இருக்கிறார்? மனோஜ்க்கு கிடைத்த பணம் பற்றிய உண்மை முத்துவிற்கு தெரிய வருமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement