பிக் பாஸ் அமீர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர்கள் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:
அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஒரு வழியாக எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள்.

அமீர் – பாவனி காதல்:
தற்போது இருவரும் கூட கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மேலும், நேற்று அமீர்-பாவனியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இதில் பிரியங்கா தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு நாத்தனார் முறையில் இருந்து நடத்தி வைத்திருந்தார். இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அமீர் பேட்டி:
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமீர், நான் சின்ன வயதில் கொஞ்சம் குட்டையாக தான் இருப்பேன். ஆனால், எனக்கு அப்போதே ராணுவத்திற்கு போக வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால், அங்கு போக வேண்டும் என்றால் உயரம் கொஞ்சம் முக்கியம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை செய்வேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நான் வளர்ந்தேன். சின்னத்திரைக்கு வந்த பிறகு தான் உணவு, டயட் போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் என்னுடைய வீட்டில் ஒருவேளை உணவு சாப்பிட்டுக் கூட இருந்திருக்கிறேன். நடனத்திற்கு வந்தபோது பிரபுதேவா சாரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடந்தது.
https://www.youtube.com/watch?v=PqdlWkweZrU
திருமணம் பற்றி சொன்னது:
அதற்குப் பின் அவர் முன் ஆட வேண்டும் என்று நினைத்தேன், அவருடன் வேலை செய்யணும் என்று ஆசைப்பட்டேன். எல்லாமே எனக்கு நடந்தது. அது நிறைவேற எனக்குள் இருந்த தன்னம்பிக்கை தான் காரணம் என்று நினைக்கிறேன். இங்கு எத்தனையோ திறமைசாலிகள் இருக்கிறார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் போட்ட உழைப்பு தான் முக்கிய காரணம். அப்படித்தான் பாவனியும் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தார். நான் விஜய் டிவியில் நடன இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாவனி ஹீரோயினாக இருந்தார். என்னுடைய ரேஞ்சு கீழே இருந்தது. அவருடைய ரேஞ்ச் மேலே ஏறி இருந்தது. அப்படி இருந்த ஒருவரிடம் பேசியதே பெரிய விஷயம். நான் அவரிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தி அவரும் எனக்கு ஓகே சொன்னது என்னுடைய தன்னம்பிக்கையால் தான் நடந்தது. அந்த தன்னம்பிக்கை தான் இன்று இந்த கல்யாணத்தில் வரை முடிந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






