படப்பிடிப்பை நிறுத்தி விட்டு.! வீர மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிதி அறிவித்த சூப்பர் ஸ்டார்.!

0
1036
pulwa
- Advertisement -

கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை  ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தினர் தற்கொலைப்படை தாக்குதல் தாக்குதல் நடத்தினர்.  வெடிமருந்து நிரப்பிய காரை சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தினர். இதில் 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

-விளம்பரம்-

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்புத் தொகையும் அரசு அறிவித்துள்ளது. அதே போல பல்வேறு பிரபலங்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி யுதவியை அறிவித்துள்ளனர்.
உயிர் இழந்த தியாகிகளுக்கு நன்றியுணர்வுடன், அவர்களது குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பை ரிலையன்ஸ் ஃபண்டேஷன் ஏற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த இரு தினங்களாக தான் கலந்துகொள்வதாக இருந்த படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மேலும், வெடுகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்த அத்தனை வீரர்கள் குடும்பத்தினருக்கும் உடனடியாக தலா 5லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement