சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இதை தவறாமல் செய்துள்ள அமிதாப் பச்சன்.

0
1003
amitab
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன். இவர் பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக மெகா சூப்பர் ஸ்டாராக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இவரை சுருக்கமாக ‘பிக் பீ’ மற்றும் ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள். நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் 1969 ஆம் ஆண்டு சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்று வரை நீங்காத இடம் பிடித்து உள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக வாங்காத விருதுகளே இல்லை.

- Advertisement -

இவர் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள். மேலும், நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர். அபிஷேக் மனைவி தான் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில் தனக்கு என்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் ஆனதை ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். நடிகர் அமிதாப்பச்சனுக்கு ரசிகர்கள் வலைத் தளம் ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அந்த வலைத்தளம் தொடங்கி இன்றோடு15 வருடங்கள் பூர்த்தி அடைந்தது.

-விளம்பரம்-

இது குறித்து நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சிரித்தபடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நன்றியை தெரிவித்து உள்ளார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று எனக்கு என்று ஒரு வலைத் தளம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, நான் எழுதத் தொடங்கினேன். இது வரை 4424 நாட்களாகி விட்டன. ஒரு நாள் கூட நான் வலைதளத்தில் எழுதாமல் இருந்ததில்லை. இது எல்லாம் உங்களால் தான் முடிந்தது.

இந்த தருணத்தில் நான் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். நடிகர் அமிதாப்பச்சன் இந்த பதிவு வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த சைரா நரசிம்ம ரெட்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் அமிதாப் பச்சன். ஆந்திர சுதந்திர போராட்ட தியாகி சைரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். தற்போது மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன

Advertisement