மைக்கேல் ஜாக்சனின் முதல் சந்திப்பு குறித்து நடிகர் அமிதாப் பச்சன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.
இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டு இருக்கிறார். இவருடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார்.
கல்கி படம்:
மேலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த கல்கி படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி இருந்த கல்கி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது.
அமிதாப்பச்சன் குறித்த தகவல்:
மேலும், இந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமிதாபச்சன், நான் ஒரு முறை நியூயார்க் ஹோட்டலில் தங்கி இருந்தேன். அப்போது என்னுடைய ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டு நான் திறந்து பார்த்தேன். அப்போது மைக்கேல் ஜாக்சன் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அமிதாப்பச்சன் பேட்டி:
அவரை பார்த்த உடனே நான் அதிர்ச்சியாகி விட்டேன். அவர் அறையை மாறி வந்து கதவைத் தட்டி இருந்தார். இருந்தாலுமே அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ரொம்ப பிரபலமானவராக இருந்தாலும் ரொம்ப தன்னடக்கம் கொண்டவர். அது தான் அவரை நான் முதன்முதலாக சந்தித்த சந்திப்பு. அதற்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று இருந்தேன். பின் நாங்கள் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தோம். ஆனால், அங்கு அறைகள் எதுவுமே கிடைக்கவில்லை.
மைக்கல் ஜாக்சன் பற்றி சொன்னது:
அந்த ஓட்டலில் 350 அறைகளையும் மைக்கேல் ஜாக்சன் மற்றும் அவருடைய குழுவினர் தான் முன்பதிவு செய்திருந்ததாக கூறி இருந்தார்கள். பின் நாங்கள் அவர் நடத்தும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அவர் ஒரு அபாரமான கலைஞர். அவருடைய பாடலும் நடனம் ரொம்ப வியக்கத்தக்கவை. மைக்கேல் ஜாக்சனை சந்தித்தது என் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.