பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். மேலும், இவரை சுருக்கமாக ‘பிக் பீ’ மற்றும் ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள் நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் 1969 ஆம் ஆண்டு சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்று வரை நீங்காத இடம் பிடித்து உள்ளார். மேலும், இவர் சினிமா துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. அது மட்டும் இல்லாமல் அவர் வாங்காத விருதுகளே இல்லை என்றும் சொல்ல அளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளவர். மேலும், இந்திய சினிமா திரை உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அமிதாப் பச்சன் அவர்கள் திகழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்த தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா என்ற மகளும், அபிஷேக் பச்சன் என்ற மகளும் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் அபிஷேக் பச்சனும் தன் தந்தையை போல பாலிவுட்டில் முன்னணி நடிகர். பின் இவர் உலக அழகி ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், 70, 80பது கால கட்டங்களில் நடிகர் அமிதாப் பச்சன் சினிமா உலகில் தோன்றினாலும் தற்போது வரை உயர்ந்து நிற்கிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு சமீப காலமாகவே உடல் நிலை பிரச்சினை உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்க்கையில், நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு தற்போது 76 வயது ஆகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் அமிதாப் பச்சன் அவர்கலுக்கு 1982 ஆம் ஆண்டு ஒரு படத்தின் படப்பிடிப்பு போது விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதையும் பாருங்க : ராமராஜனை எங்கள் வீட்டில் அடித்து வெளுத்தார்கள். விவாகரத்து குறித்த காரணத்தை சொன்ன நளினி.
இதனால் அவருக்கு உடனடியாக சில ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். இதற்கு நிறைய ரத்தம் தேவைப்படும் நிலையில் இருந்தது. மேலும், ஆபரேஷனும் நல்ல முறையில் முடிவடைந்தது. ஆனால், அந்த ரத்தத்தில் ஹெப்படீஸ் பி என்ற வைரஸ் இருந்து உள்ளது என்று தெரிய வந்து உள்ளது. இதனால் பின்னர் நாளடைவில் செல்லச் செல்ல நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த வைரஸினால் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் இவர் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு தான் வந்தார். தற்போது இந்த பிரச்சனையால் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் செயலிழந்து உள்ளது என்ற தகவல் தற்போது வெளி வந்து உள்ளது.
இதனைக் கேட்டு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும், இதன் காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் தன்னுடைய மொத்தம் 2,800 கோடி சொத்துக்களை எல்லாம் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு சரிசமமாகப் பிரித்து வைக்க முடிவு செய்து உள்ளார். மேலும், அதற்கான வேலைகளையும் தற்போது செய்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. மேலும், அமிதாப் பச்சன் நிலைமையை நினைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.