நடிகை ஐஸ்வர்யா ராயின் அழகு குறித்த கேள்விக்கு அமிதாப்பச்சன் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டு இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த கல்கி படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
அமிதாப் பச்சன் குறித்த தகவல்:
இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி இருந்த கல்கி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது.
மேலும், இந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது. இதை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமிதாப்பச்சன் அவர்கள் கோன் பனேகாகுரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அமிதாப் பச்சன் நடத்தும் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக அமிதாப்பச்சன் நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது 25வது ஆண்டில் இந்த நிகழ்ச்சி ஜூனியர் பிரிவில் நடக்கிறது. இதில் பிரனுஷா தாம்பே என்ற இளம் பெண் கலந்திருந்தார். அப்போது அவர் அமிதாப்பச்சனிடம் ஐஸ்வர்யாவின் அழகு பற்றி கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அமிதாப்பச்சன், ஆமாம் அவர் அழகுதான் என்பது எனக்கும் தெரியும் என்று சொன்னார். உடனே அந்த பெண், ஐஸ்வர்யா அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் ரொம்ப அழகு.

இளம் பெண் கேள்வி:
நீங்கள் அவருடன் தானே இருக்கிறீர்கள். எனக்கு அழகாக இருக்க சில ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமிதாபச்சன், நான் ஒன்றை மட்டும் தான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்து போகும். ஆனால், இதயத்தில் இருக்கும் அழகு தான் ரொம்ப முக்கியம் என்று கூறியிருக்கிறார். எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து எப்போதும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய்.

அமிதாப் பச்சன் பதில்:
இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.






