நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்- ஜமா பட இயக்குனருக்கு அம்மு அபிராமி வைத்த கோரிக்கை

0
381
- Advertisement -

ஜமா பட இயக்குனருக்கு நடிகை அம்மு அபிராமி வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அம்மு அபிராமி இருக்கிறார். சமீப காலமாக இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஜமா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை பாரி இளவழகன் நடித்தும், இயக்கியிருக்கிறார். இவரே இந்த படத்தில் அம்முவுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். நமது மண் சார்ந்த கலை தெருக்கூத்து கலையை மயப்படுத்தி வந்துள்ளது ‘ஜமா’ திரைப்படம். இப்படத்தில் சேத்தன், கிருஷ்ண தயால், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், ஏ‌.கே. இளவழகன், காலா குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டெக் நிறுவனம் தயாரித்துள்ளது.

- Advertisement -

ஜமா படம் :

இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி ஜமா படத்தின் இயக்குனருக்கு வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜமா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை அம்மு தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்து, திருவண்ணாமலையிலேயே ‘டாப்பு ஜமா ஜகா’. படப்பிடிப்பு நடந்த நாட்களை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

அம்மு அபிராமி பதிவு:

கூடிய விரைவில் மீண்டும் படம் எடுங்க சார் என்று இளவழகன் இடம் அன்பு வேண்டுகோளாக வைத்திருக்கிறார். தற்போதைய இவருடைய பதிவுதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு இயக்குனர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன் இவர் சில படங்களில் துணை வேடங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அம்மு அபிராமி குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படத்தின் மூலம் அம்மு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அம்மு அபிராமி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

அம்மு அபிராமி திரைப்பயணம்:

அதற்கு பின் அம்மு அபிராமி கடந்த வருடம் வெளியான பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கண்ணகி படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசனுக்கும் இயக்குனராக இருந்த பார்த்தீவ் மணி என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement