போலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த், கருணாஸ் பட நடிகை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

0
1811
navneeth
- Advertisement -

தமிழில் ‘அரசாங்கம்’ படத்தில் விஜயகாந்த், ‘அம்பாசமுத்திரம்’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நவ்னீத் கெளர். இவர் 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். [பின்னர் இவர் 2019 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம் பியும் ஆனார். கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாஜக மற்றும் சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து இருந்தது. இதில் பாஜக சிவசேனா கூட்டணி 41 இடங்களை வென்றது.

-விளம்பரம்-

அதேபோல காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதராவுடன் தன் கணவரும் சுயட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கிய யுவ ஸ்வபிமானி பக்ஷா கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிட்டார். இப்படி ஒரு நிலையில் நடிகை நவ்னீத் கெளர் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த ஆனந்த் ராவ் அட் சுலை விட 36 ஆயிரம் வாக்குகள் வாக்குகள் அதிகம் பெற்று அவரை தோற்கடித்து எம்பியும் ஆனார்.

- Advertisement -

2014 ஆம் ஆண்டு இதே வேட்பாளரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட நடிகை நவ்னீத் கெளர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நவ்னீத் கெளரின் வெற்றியை எதிர்த்து சிவசேனா கட்சி சார்பாக அமராவதி முன்னாள் எபி ஆனந்த் ராவ் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். நவ்னீத் கெளர் அமராவதி தனித்தொகுதியில் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி வெற்றி பெற்றுள்ளார். நவ்னீத் கெளர் பஞ்சாபில் இருந்து வந்தவர் மஹாராஷ்டிராவில் எஸ்.சி பிரிவிவின்கீழ் வராத லபானா சாதியை சேர்ந்தவர்.

போலியாக பள்ளியின் போலி ஆவணங்களைக் காட்டி பட்டியலினப் பெண் என்று சான்றிதழ் வாங்கிவிட்டார் என்று ஆனந்த் ராவ் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த  நீதிபதிகள் நடிகையும் எம்.பி.யுமான நவ்னீத் கெளரின் சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தனர். ஆறு வாரங்களுக்குள் எல்லா சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக நடிகை நவ்னீத் கெளர் அறிவித்துள்ளார். 

-விளம்பரம்-
Advertisement