தனது தெத்துப்பல்லை சரி செய்யவேண்டுமா என்று ரசிகர்களிடம் யோசனை கேட்ட பிகில் பட நடிகை – பெரும்பாலான ரசிகர் சொன்ன பதில்.

0
1253
amirtha
- Advertisement -

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CEMjvEtBIcr/

ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான்.இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா.

- Advertisement -

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்திற்கு முன்பாகவே இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருக்கிறார். இதை ஒரு சிலர் அறிவார்கள். ஆனால், இவர் தெறி திரைப்படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘லிங்கா ‘ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது கவினுடன் லிப்ட் படத்திலும் நடித்து வருகிறார். நடிகை அமிர்தாவின் அழகே அவரது தெத்துப்பல் தான். இந்த நிலையில் தனது பல் வரிசையை சரி செய்ய வேண்டுமா என்று ரசிகர்களிடம் யோசனை கேட்டிருந்தார். அதற்கு 47% ரசிகர்கள் ஆம் என்றும் 53 % பேர் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement