எதையும் சந்தோசமாக பதிவிட முடியல. வீடியோ பகிர்ந்து மனம் வருந்திய அமிரிதா.

0
3979
Amritha
- Advertisement -

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிகில் திரைப்படம் தான். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா சமீபத்தில் மனதை உருக்கும் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் ஜெசிகாவா இது. என்ன இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.

- Advertisement -

சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டு நாடு முழுவதும் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். நாம் அனைவரும் அறிந்தபடி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நாடு முழுவதையும் உலுக்கியது மற்றும் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளின் படங்கள் வெளியானவுடன், சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் தங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

-விளம்பரம்-

பிரியங்கா வழக்கில் சம்மந்தபட்ட குற்றவாளிகளின் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில்வைரலாக பரவியது. இந்த நான்கு பேரும் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நாட்டில் நடைபெறுவதைத் தடுக்க அவர்களை ஒருபோதும் தண்டிக்க வேண்டாம் என்று பலர் கோரினர். இந்த நிலையில் அம்ரிதா ஐயர் இதே போன்று நடைபெற்றுள்ள வேறு ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

2018 ஆம் வெளியான இந்த வீடியோவில், மூன்று நாட்களில் நடந்த தொடர்ச்சியான கற்பழிப்பு வழக்குகளைப் படித்த பிறகு, அந்த பத்திரிகையாளர், ஒரு பெண் வாழ ஒரு பாதுகாப்பான நாட்டை வழங்குமாறு காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் இந்திய நாட்டு ஆண்களை கேள்வி கேட்கிறார். மேலும், அரசியல் வாதிகளையும் அந்த பெண் வெளுத்து வாங்குகிறார். இந்த விடியோவை பகிர்ந்துள்ள அம்ருதா, தயவுசெய்து பாருங்கள் !! இதையெல்லாம் பார்த்து நான் மிகவும் கண்ணீருடன் இருக்கிறேன், இது மிகவும் கவலைக்குரியது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கேட்டபின் மகிழ்ச்சியுடன் எதையும் பதிவிட முடியவில்லை. இந்தவிஷயத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்

Advertisement