சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக்கினாலும், அவை பல காலங்கள் ஒளிபரப்பாக்கினாலும் சில நிகழ்ச்சிகள் மட்டுமே ரசிகர்கள் மனதிலும் சரி தொலைக்காட்சியிலும் சரி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் மெகா தொலைக்காட்சியில் பல காலமாக ஒளிபரப்பாகும் “அமுதகானம்” நிகழ்ச்சி கடந்த ஆண்டு2022 டிசம்பர் 14ஆம் தேதி 5500 எபிசோடை கடந்தது. இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆதவன் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அமுதகானம் ஆதவன் :

அந்த பேட்டியில் தன்னுடைய வாழ்கை பற்றியும் அமுதகானம் நிகழ்ச்சியை பற்றியும் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். சங்கரன் கோவில் அருகே உள்ள முள்ளிக்குளத்தில் தான் இவர் பிறந்திருக்கிறார். தரமணி என்ற திரைப்பட கல்லூரியில் கேமெரா துறையில் படித்துள்ளார். இவர் படிக்கும் பொது ஒரு குழுவிற்கு 10 பேர் முட்டும் தான் இருப்பார்களாம், ஆனால் இவர் சேர்ந்த கேமெரா படிப்பில் 15 பேர் வந்துள்ளனர். இதனால் மீதமுள்ள நபர்கள் பார்த்து கற்றுக்கொண்டனர்.

Advertisement

BSC Physics பிடிப்பு :

இதனால் அவர் திரைக்கதை , கதை, வசனம், ஒளிப்பதிவு என அனைத்தயும் இவரே பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதனால் பாதி நேரம் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் மாணவருடன் தான் இருந்து அவற்றை கற்றுக் கொண்டாராம். மேலும் கேமெராவுக்கு மட்டும்தான் சான்றிதழ் கொடுப்பார்கள் என்பதினால் மற்றவைகளை கற்றுக்கொண்டுள்ளார். பின்னர் இவர் திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் BSC Physics படிப்பை படுத்த படியே அவருடைய ஊரில் உள்ள முற்போக்கு நாடக குழுவுடன் இணைந்தது இவருக்கு பல விஷியங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருந்திருக்கிறது.

அமுதகானம் சாதனை :

பின்னர் தான் “அமுதகானம்” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 5500க்கும் மேலே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தன்னுடைய 5500 எபிசோடை நிறைவு செய்தது. அன்றைக்கு 13 மணிநேரம் முழுவதும் இந்த நிகழ்ச்சிதான் ஓடியது. மேலும் அமுதகானம் நிகழ்ச்சி மெகா டிவி தொடங்கியதில் இருந்து ஒளிபரப்பாகிறது. இதனால் மெகா டிவியை அம்மா என்றும் அமுதகானம் நிகழ்ச்சியை குழந்தை என்றுதான் அழைப்பார்களாம்.

Advertisement

அப்போது முதல் இப்போது வரை :

மேலும் இந்த நிகழ்ச்சியில் பழைய எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் தான் ஒளிபரப்பாகின்றன என்றாலும் 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்கின்றனர் என்பதை நாம் மறுக்க முடியாது. மேலும் அப்போது முதல் இப்போது வரையில் டி ஆர் பி ஓர் மாதிரித்தான் இருக்கின்றனது சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது என்று கூறினார் ஆதவன்.

Advertisement

டி எம் எஸ் சந்திப்பு :

இதற்கடுத்து டிஎம்எஸ் அவர்களை நினைவு கூர்ந்த ஆதவன் `ஒரு முறை டிஎம்எஸ்யை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு காலையில் சென்றுள்ளார். அப்போது டிஎம்எஸ் அவர் உதவியாளரிடன் நான் 8-9 வரையில் யாரையும் பார்க்க மாட்டேன் என்று உனக்கு தெரியாத என்று கூறுவதை கேட்ட ஆதவன் கத்திக்கொண்டிருந்திருக்கிறார். பின்னர் வெளியில் வந்த டிஎம்எஸ் ஆதவனை பார்த்தும் உங்களுடைய அமுதகானம் பார்ப்பதினால் தான் 8-9 வரையில் நான் வெளியில் வருவதில்லை, உங்களுடைய நிகழ்ச்சி பார்த்த பிறகுதான் வெளியில் செல்வேன் என்று கூறியுள்ளார்.

நாக்கில் எழுதினார் :

மேலும் டிஎம்எஸ் தீவிர முருகன் பக்தி கொண்டவர், எனவே ஆதவனை அவருடைய பூஜை அறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த முருகன் வேலால் நாக்கில் எழுதி முருகப்பெருமான் எனக்கு கொடுத்த அத்தனை புனியத்தையும், அருளையும் நான் உனக்கு தருகிறேன் என்று ஆசிர்வாதம் செய்தார். இப்படி பலர் என்னை பாராட்டும் போதும் வாழ்த்தும் போதும் நான் அவர்களுடைய அன்பினால் ஆனந்த கண்ணீர் வடித்திருகிறேன் என்று மெகா டிவி “அமுதகானம்” ஆதவன் அந்த பெட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

Advertisement