எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் பிரபல மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் நடிகை ஆனார். தமிழில் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்து இருந்தார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து 2.0 என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து எமி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருந்தார்.
எமி ஜாக்சன் குறித்த தகவல்:
விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். திருமணத்திற்கு முன் எமி தாயான விஷயம் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகி இருந்தது. பிறகு எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்தை பிறந்த பிறகும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.
எமி காதல் விவகாரம்:
திடீரென்று எமி கடந்த ஆண்டுக்கு முன் தன்னுடைய காதலனுடன் மனகசப்பு ஏற்பட்டு விட்டது அதனால் பிரிகிறேன் என்று அறிவித்திருந்தார். இவர் ஏற்கனவே ஆறு வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்திருந்தார். பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்கை எமிஜாக்சன் காதலித்திருந்தார். இவர்களுடைய காதலும் பிரிந்தது. அதனை தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை எமிஜாக்சன் காதல் திருமணம் செய்யாமல் கர்ப்பமாகி ஆண் குழந்தையும் பெற்றிருந்தார்.
நடிகர் எட் வெஸ்ட்விக் குறித்த சர்ச்சை:
இதுவும் பிரேக் ஆனது. தற்போது நாலாவதாக இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார். பின் அவர் அந்த பெண்ணை பிரேக் அப் செய்தார். அது மட்டுமின்றி இவர் பாலியல் புகாரிலும் சிக்கினார். இப்படி பல சர்ச்சைகளில் உள்ள நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் எமி டேட்டிங் செய்வது குறித்து பலரும் விமர்சித்து கருத்து போட்டு இருந்தார்கள்.
எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் :
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் லண்டனில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதில் எமி ஜாக்சன் தன்னுடைய மகனையும் அழைத்து வந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால், சிலர் இந்த திருமணம் ஆவது நடக்குமா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.