பசியும் பட்டினியாக போராடிய சூரி! தான் கடந்துவந்த பாதை பற்றி கூறுகிறார் சூரி ?

0
1403
soori
- Advertisement -

என்ன… அந்தப் படங்கள்ல இவர் நடிச்சிருந்தாரா? நான் பாக்கவேயில்லையே…’ என்று யோசிக்குமளவுக்கு மைனர் ரோல்களில் நடித்துவந்த இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது பரோட்டாதான். இதன்பிறகு, பல படங்களில் தன் வசனத்தாலும் உடல் மொழிகளாலும் முக பாவனைகளாலும் பட்டி தொட்டியெங்கும் பட்டயைக்கிளப்பி, சமீபத்தில் புஷ்பா புருஷனாக அதகளம் செய்தவர் சூரி. தற்போது பல படங்களில் பிஸியாக வலம்வரும் இவரிடம் ஒரு ஜாலி சாட்…
soori
முன்பைவிட இப்போ கொஞ்சம் கலர் ஆகிட்டீங்களே.

-விளம்பரம்-

’சந்தோசத்துல ஒரு பூரிப்புல கூட இருக்கலாம். அப்போ வறுமை, பசியும் பட்னியுமோட சினிமாவுக்காகப் போராடிகிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு மக்கள் மத்தில பேரும் புகழும் கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. சந்தோசம் மட்டும் இருந்தா காக்கா கூட கலராயிரும்.’’

- Advertisement -

திரைக்குப் பின் சூரி எப்படி?

‘’நான் எப்பவுமே ரொம்ப ஜாலியான ஆளு. நீங்க ஸ்கிரீன்ல பாக்குறதைவிட டபுள் மடங்கு வெளியே இருப்பேன். அதைத்தான் வெளிப்படுத்துறேன். என் கேரக்டர்ல பாதியைத்தான் ஸ்கிரீன்ல பாக்குறீங்க.
soori இன்னும் அம்பது சதவிகித சூரி உள்ள இருக்கான். அவனை இனி வரும் காலங்கள்ல வெளிக்கொண்டுவரணும். எனக்கு நண்பர்கள் அதிகம் ஊர்லையும் சரியும் சென்னைலயும் சரி. அவங்கிக்கிட்ட இருந்துதான் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் ஊருக்குப் போனா, அவங்ககூடதான் அதிக நேரம் இருப்பேன். இன்னொன்னு சொல்லட்டுமா நான் ஒரு தனிமை விரும்பி. ஷூட்டிங்காக வேற எங்கயாச்சும் போயிட்டா ரூம்ல நான் மட்டும் டிவி பார்த்துட்டு தனிமையா இருப்பேன்.

-விளம்பரம்-

படங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் அதிகமா வர ஆரம்பிச்சுடுச்சு. அதை எப்படிப் பார்க்குறீங்க?

எனக்கு இதுல உடன்பாடு இல்லை. நான் பேசுன வசனங்கள்ல எங்கேயாச்சும் டபுள் மீனிங் வந்தால் நான் ஃபீல் பண்ணுவேன். டபுள் மீனிங் வசனங்கள் இப்ப மட்டுமல்ல. அந்தக் கால புராண நாடகங்கள் காலத்துல இருந்தே இருக்கு.
soori அப்போல்லாம் ஜென்ட்ஸைவிட லேடீஸ்தான் என்ஜாய் பண்ணி பார்ப்பாங்க. அந்த மாதிரியான வசனங்கள் பளிச்சுனு நேரடியா இல்லாம முகம் சுளிக்க வைக்காம, யாரையும் காயப்படுத்தாம இலைமறை காயா இருந்தா ஓகே’ என்றவர் ப்பாய்..ஜீ யூ என்றபடி விடைபெற்றார்.

Advertisement