பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சனா.! அவரது கணவரே சொல்லிட்டார் பாருங்க.!

0
699

16 போட்டியாளர்கள் 100 நாள் ஒரே வீட்டில் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சியாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக துவங்கியது.

தமிழில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

மேலும், மூன்றாவது சீசனில் பங்குபெற போவது இவர்கள் தான் என்று சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் பிரபல தொகுப்பாளினியாக அஞ்சனா, தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் ஒரு ஸ்வாரசியான விஷயம் நடைபெற இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டீவீட்டை கண்ட பலரும் என்ன ஸ்பெஷல் என்று கேள்வி கேட்க அஞ்சனாவின் கணவர் கயல் சந்திரன் பிக் பாஸ் என்று பதிவிட,சில ரசிகர்களும் பதிவிட்டனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை என்று அஞ்சனா தெரிவித்துவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement