30 ஆண்டுக்கு பின் மீண்டும் மணிரத்னம் படத்தில் – பொன்னியின் செல்வன் அனுபவம் பகிர்ந்த அஞ்சலி பட பிரபலம்.

0
283
Anand Krishnamoorthi
- Advertisement -

பொன்னியின் செல்வன் பட அனுபவத்தை சவுண்ட் டிசைனர் ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்தினம். இவருடைய படைப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த படத்தில் சவுண்ட் டிசைனர் ஆக பணிபுரிந்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. இவர் இயக்குனர் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் ஒன்பது வயதில் பள்ளி நாடகங்களில் நடித்தார். அதன் பின் சதி லீலாவதி, ஆசை, தளபதி போன்ற படங்களில் நடித்து இருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் சீரியல்களிலும் நடித்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின்னர் இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் துணை இயக்குனராக இரண்டு வருடங்கள் பணியாற்றி இருந்தார். கமலின் உன்னை போல் ஒருவன் படத்தில் டையலாக் எடிட்டராகவும், அதே படத்தில் ஒரு டையலாக் ரோலிலும் நடித்து இருந்தார். பின்னர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திலும் சூப்பர்வைசிங் சௌண்ட் எடிட்டராகவும் பணியாற்றினார். பின் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்திலும் சௌன்ட் டிசைனர் ஆனந்த கிருஷ்ணன் தான்.

-விளம்பரம்-

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி:

தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தில் சவுண்ட் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆனந்த கிருஷ்ணமூர்த்தி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், இது வந்து முழுக்க முழுக்க வரலாற்று கதை. வரலாற்றில் எப்படி இருந்தது என்று நமக்கு தெரியாது. எல்லோருமே சேர்ந்து ஒரே ஒரு படத்தை தான் எடுக்க வேண்டும். வேறு வேறு கதை சொல்ல முடியாது. அதுதான் இந்த படத்தில் ஒரு பெரிய விஷயமே. சில நேரம் குதிரைக்கு நாமே மூச்சு விடும் சவுண்டை கொடுக்க வேண்டும்.

படம் குறித்து சொன்னது:

சில நேரம் அது மூச்சுவிடும் சவுண்டை நாம் ரெக்கார்ட் செய்ய வேண்டும். இப்படி பல நுணுக்கங்கள் இருக்கிறது. ஒரு டீம் ஓட தான் வேலை செய்ய முடியும். இது ஒருத்தர் செய்யும் வேலை கிடையாது. எல்லோரும் சேர்ந்து பண்ணால்தான் மிகப்பெரிய வெற்றி. ஒரு புத்தகம் படித்தவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதேதான் மணி சாரும் யோசித்தார். அந்த கூட்டு முயற்சியின் விளைவாகத்தான் பொன்னியின் செல்வன் உருவாகி இருக்கிறது என்று பல சுவாரசியமான விஷயங்களை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூறி இருக்கிறார்.

Advertisement