சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார் மாறன். இந்த நிலையில் விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சித்த மாறனை, பிகில் படத்தில் நடித்துள்ள ஆனந்த்ராஜ் மறைமுகமாக கண்டித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆனந்த்ராஜ் பேசுகையில், வியாபார ரீதியாக ஒரு படத்தை எடுக்கிறோம் அது கலவையான விமர்சனங்களை பெறுகிறது. பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் விமர்சனம் செய்யுங்கள் .ஆனால், தனிமனித விமர்சனம் வேண்டாம் என்னைப் பொறுத்தவரை இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் அது என்னுடைய தம்பி விஜய்யின் ஒரே ஒருவருக்காக மட்டும்தான். விஜய் என்ற அந்த மந்திர சொல்லியிருக்காங்க. இந்த படத்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் அப்படி என்று தான் மக்களும் நினைக்கிறார்கள் .அ வருக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
இதையும் பாருங்க : பாவாடையில் பஜாடா நடனம். கண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ.
படத்தை விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யக்கூடாது. குறிப்பாக இந்த படத்தை ஒருவர் விமர்சித்து இருந்தார் அவருடைய பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. அவர் விளம்பரத்திற்காகவோ அல்லது இந்த நடிகரின் எதிர் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவோ பிகில் படத்தில் விஜயின் குரலை விமர்சித்து, இத்தனை செலவு செய்கிறீர்கள் அவருக்கு ஒரு ஹால்ஸ் மாத்திரையை வாங்கி கொடுக்க மாட்டீர்களா என்று குறிப்பிட்டிருந்தார். 150 கோடி பணத்தை போட்டு படம் எடுத்தவர்களை இப்படி கூறுவது தனிமனித விமர்சனம் கிடையாதா.இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் நான் தாழ்வாகவும் கேட்டுக்கொள்கிறேன் இனி இதுபோன்ற விமர்சனங்களை செய்ய வேண்டாம். இது கண்டிப்பாக ஒரு நடிகரை பாதிக்கும்.
நான் பக்கத்தில் இருக்கிறேன் ஒரு நாள் ஒரு கெட்டப்பை போட்டு வந்து நடிப்பாரா இன்னுமொரு கெட்டப்பை போட்டு வந்து நடிப்பார் ஒரு நடிகராக நான் சொல்வது என்னவெனில் ஒரு நடிகராக இருந்தால் அவருக்கு என்று ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும் நடிகர் திலகத்தை எடுத்துக்கொண்டால் அவர் ராஜா கெட்டப் போட்டால் நடையை மாற்றுவார் பேச்சை மாற்றுவார் அதே போல இதுவும் ஒரு ஸ்டைல் தான். ஆனால், அவரை விமர்சனம் செய்வார்களா? எனவே தனிப்பட்ட விமர்சனம் தயவுசெய்து வேண்டாம் என்று கூறியுள்ளார் ஆனந்த் ராஜ்.