பொண்டாட்டி கையில் அடி வாங்கியதால் பொது இடத்தில் அசிங்கப்பட்ட ஆனந்த் வைத்தியநாதன்.!

0
1304
Anand

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். அதில் மிகவும் சீனியர் என்றால் ஆனந்த் வைத்தியநாதன் தான். பாட்டு சொல்லி கொடுக்காமல் இவருக்கு என்ன பிக் பாஸ் வீட்டில் வேலை என்று இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போதே இவரை அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

bigg boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களாக குரல் வள நிபுணராக பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே, இந்த வயதிலும் எனக்குள் சில பயம் இருக்கிறது அதனை போக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஆனந்த் வைத்தியநாதன்,நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும், டேனியலும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது டேனியல் ‘இசை எங்கிருந்து வருகிறது’ என்று பாலஜியிடம் கேட்டார். அதற்கு பாலாஜி ‘தூக்கத்தில் குறட்டையில் இருந்து வருகிறது ‘ என்று கிண்டலடித்துள்ளார்.

Ananth-Vaidyanathan

இதனை கேட்டு கடுப்பான ஆனந்த்’இது போன்ற சின்ன தனமான ஜோக்குகளை நிறுத்தி கொள்ளுங்கல், எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கின்றனர். நான் ஏற்கனவே ‘அவன் இவன் ‘ படத்தில் பொண்டாட்டியிடம் அடிவாங்கும் கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தேன். அதற்கே ஒரு சில ரசிகர்கள் நான் வெளியில் சென்ற போது”பொண்டாட்டியிடம் அடிவாங்கியவரே’ என்று கிண்டல் செய்தனர். அதானல் நான் அதற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்தேன்.” என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.