அடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்..! மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்! யார் தெரியுமா..?

0
611
Anand

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக நடிகர் பொன்னம்பலத்தை பிக் பாஸ் சிறையில் அடைத்துவிட்டு சென்றார்.

Anand vaithiyanathan

இந்நிலையில் தற்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அனந்த் வைத்தியநாதன். சமீபத்தில் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனந்த் வைத்தியநாதனிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர்களிள் யாரை பிக் பாஸ் சிறையில் அடைப்பீர்கள் என்று கேட்டதற்கு பாடகி அனுராதாவின் பெயரை கூறினார்.

இதற்கு காரணத்தை கூறிய அனந்த் வைத்தியநாதன் ‘அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதால் அவர் சுலபமாக சிறையின் கம்பி வழியே வெளிவந்து விடுவார்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார். அதே போல பொன்னம்பலத்தை எதற்கு பிக் பாஸ் சிறையில் அடைத்தீர்கள் என்று கேட்டதற்கு’அவர் பெண்களை கொஞ்சம் தவறாக பேசினார் அதனால் தான் அவரை சிறையில் அடைத்தேன்.

Anuradha Sriram

Makapa-Anand

அதே போல மா. கா. ப வும் அடிக்கடி பிரியங்காவை கிண்டல் செய்து வருகிறார். ஆனால், இனிமேல் அவர் பிரியங்காவை கேலி செய்தால் அவரையும் சிறையில் அடைத்து விடுவேன்’ என்று கிண்டலாக கூறியிருந்தார் அனந்த் வைத்தியநாதன் . இது பிக் பாஸ் மேடை என்று நினைத்து அவரே கன்ஃபயூஸ் ஆகிட்டாரோ என்னவோ.