உடன் நடிக்கவில்லை என்றாலும் நேரில் பார்த்தவுடன் என் காலில் விழுந்தார் அஜித்.!

0
589

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ரசிகர்கள் பட்டாளத்தை இவருக்கு சினிமா துறையிலும் பல்வேறு பிரபலங்களும் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே நடிப்பையும் தாண்டி அஜித்தின் நல்ல குணம் தான்.

Image result for anand raj

இதுவரை அஜித்துடன் நடித்த நடிகர்கள் தான் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி உள்ளனர். ஆனால், இதுவரை அஜித்துடன் ஒரு படத்தில் கூட நடிக்காத பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ், அஜித்தின் நல்ல குணத்தைப் பற்றி கூறியுள்ளார். பிரபல நடிகரான ஆனந்தராஜ், ரஜினி ,கமல் தொடங்கி விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திலும் நடிகர் ஆனந்தராஜ் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆனந்தராஜ் இடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேட்கப்பட்டது அப்போது விஜய் குறித்து பேசிய ஆனந்தராஜ், விஜய்க்கு இருக்கும் குணத்திற்கு அவர்கள் கண்டிப்பாக இன்னும் ஒரு தனிப்பட்ட இடம் கிடைக்கும் என்று கோரியிருந்தார்.

மேலும், அஜித் குறித்து பேசிய ஆனந்தராஜ் அஜித்துடன் நான் இதுவரை ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. ஆனால், ஒரு சமயத்தில் ஆளுநரை சந்தித்த போது அவர் என்னிடம் அவ்வளவு நன்றாக பேசினார். மேலும், என் காலில் விழுந்து ஆசீர்வாதம் கூட வாங்கினார். அஜித்திற்கு நடிப்பில் என்னை விட அனுபவம் அதிகம் இருப்பினும் அதை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் அவர் நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement