சூப்பர் சிங்கரில் சிவாங்கி இதனால் தான் வெல்லவில்லையா – ஷிவாங்கியிடம் இருக்கும் குறையை சுட்டிக்காட்டிய அனந்த் வைத்யநாதன்

0
3976
- Advertisement -

பாடகி சிவாங்கி குறித்து பிக் பாஸ் அனந்த் வைத்தியநாதன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசையமைப்பாளர்களை உருவாக்கியும் இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பாடகர்களாக்கியும் இருக்கிறார். ஆனால், சில வருடமாகவே இவர் நிகழ்ச்சியில் காணவில்லை. இடையில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவருடைய குரல் வளம் பாதிக்கப்பட்டது. இதனால் வேகமாக பாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இதனை அடுத்து இவரும் பல சிகிச்சைகள் செய்தும் எந்த பலனும் இல்லை.

- Advertisement -

அனந்த் வைத்தியநாதன் குறித்த தகவல்:

பின் இதுதான் தன்னுடைய நிலைமை என்று புரிந்து கொண்டு இருந்தார். இருந்தாலும் தன்னுடைய பாடல் கலை அழிந்து விடக்கூடாது என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகலாம் என்று பல கனவுகளுடன் நுழைந்த அனந்த் வைத்தியநாதனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன்:

இந்த நிகழ்ச்சியில் நுழைந்த இவர் இரண்டாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். அதோடு இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சில ஆண்டு என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை. பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டியில் கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் பேட்டி ஒன்றிய அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அனந்த் வைத்தியநாதன் அளித்த பேட்டி :

அதில் அவர் சிவாங்கி குறித்து கூறியிருந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் சிவாங்கி பற்றி எனக்கு தெரிந்தது. சிவாங்கியின் ரத்தத்திலேயே பாட்டு திறமை இருக்கிறது. அவருடைய அம்மா ஒரு பாடகி. சிவாங்கியின் குரல் பேசும்போது, பாடும்போதும் வித்தியாசம் இருக்கும். இதை நிகழ்ச்சியில் நடுவராக இருந்த அனுராதா கூட சொல்லிருந்தார். சிவாங்கியின் குரல் இன்னும் மேம்படுத்தினால் வேறு லெவலில் வருவார்.

சிவாங்கி குறித்து சொன்னது:

அதை செய்திருந்தால் அவர் அந்த சீசனிலேயே வெற்றி பெற்றிருப்பார். இருந்தாலும், தற்போது சிவாங்கி பல படங்களில் பாடிக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்து வருகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அவர்களுக்கு திறமை இருக்கிறது என்று இல்லை. இப்போது அதைவிட பல மடங்கு சிவாங்கி சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அது எனக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தற்போது சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்கி கொண்டு வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement