திருமணத்திற்கு சென்ற இடத்தில் சிகிரெட்டை ஊதித்தள்ளிய லைகர் பட நடிகை.

0
298
ananya
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான சங்கி பாண்டேவின் மகள் தான் தற்போது முன்னை நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே.இவர் கடந்த 201ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக்கினார். இவர் நடித்த முதல் படமே பெரிய ஹிட் அடித்ததன் காரணமாக இவருக்கு சிறந்த அறிமுக நாயகி என்ற பிலிம் பேர் விருது கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் தேவர்கொண்ட நடித்த “லைகர்” என்ற திரைப்படத்தின் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக்கினார்.

-விளம்பரம்-

இந்நிலையில் 24 வயதே ஆகும் அனன்யா பாண்டியா சமீபத்தில் ஆர்யன் கானுக்கு போதை பொருள் மருந்து விநியோகஸ்தர்களின் போன் நம்பரை வழங்கியது பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தான் என்றும் அதற்கான வாக்குமூலம் ஆதாரங்களும் உள்ளது என்றும் வெளியான தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஷாருக்கானின் மகன் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்தியதால் போலீசார் கைது செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

ஆர்யன் கான் கைது :

கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை அருகில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார். அவரை வெளியில் எடுக்க ஷாருக்கான் பல வகையில் போராடி வெளியில் எடுத்தார். மேலும், சோசியல் மீடியாவில் ஆர்யன் கான் கைது குறித்து பல தகவல்கள் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியது.

போதைப்பொருள் வாங்க உதவி செய்த நடிகை :

இந்நிலையில் சொகுசு கப்பலில் பயணம் செய்யப் பட்ட நபர்களில் சிலருடன் வாட்ஸ் அப்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு போதைப் பொருள்களை வாங்குவதற்கு உதவியாக இருந்துது பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே என்று கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஆர்யன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்கலிங் எண்களை கொடுத்ததே அனன்யா என்றும் அதோடு மூன்று முறை அவருக்கு போதை மருந்துகளை வாங்க அனன்யா பாண்டே உதவியாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அனன்யா வாக்குமூலம் :

மேலும் இது குறித்து அனன்யா பண்டேவிடம் விசாரணை நடத்தும் போது நான் எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துவது இல்லை. வாட்ஸப்பில் போதைப்பொருட்கள் குறித்து நான் கூறியது வெறும் ஜோக்குகாக மட்டுமே என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அனன்யா வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி இவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

மீண்டும் ஒரு சர்ச்சை :

இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனன்யா பாண்டே. அதாவது அனன்யா பாண்டேவின் குடும்பத்தில் தற்போது திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே தன்னுடைய சக தோழிகளுடன் சேர்ந்து புகைபிடித்தாக ஒரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் அன்னயா புகைபிடித்தாரா? என்று ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளகி உள்ளனர்.

Advertisement