மீண்டும் அன்பே வா சீரியலில் இருந்து விலகியுள்ள நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சீரியலில் இருந்து விலகுவதும், வேறு ஒருவர் மாற்றமடைவதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. அதிலும் சமீபகாலமாக பல நடிகர்கள் காரணமின்றி சீரியலில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அன்பே வா சீரியலில் இருந்து நடிகை ஒருவர் மாற்றப்பட்டு இருக்கிறார். சன் டிவி என்று சொன்னாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சீரியல் தான். சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி தற்போது டிஆர்பியில் முக்கிய இடத்தை வகித்து வரும் சீரியல்களில் ஒன்று அன்பே வா. இந்த சீரியலில் வருண், பூமிகா கதாபாத்திரத்தில் ஹீரோ, ஹீரோயின் நடிக்கிறார்கள். இந்த சீரியல் வெளிவந்து சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பயங்கர ஹிட் ஆகி விட்டது. இப்படி டிஆர்பியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அன்பே வா சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் அடுத்தடுத்து காரணமின்றி வெளியேறி உள்ளார்கள். முதலில் இந்த சீரியலில் இருந்து வில்லி கதாபாத்திரத்தில் அதாவது கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தவர் ரேஷ்மா.
அன்பே வா சீரியலில் ரேஷ்மா விலகியது:
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பே சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அன்பே வா சீரியலில் ரேஷ்மா மிரட்டி வந்தார். பின் காரணமின்றி இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு பதில் தற்போது சீரியல் நடிகை வினோதினி நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு ரேஷ்மா சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவி விட்டார். தற்போது இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அன்பே வா சீரியலில் மீண்டும் விலகிய நடிகை:
இதற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் ஜெனிஃபர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரேஷ்மாவை தொடர்ந்து அன்பே வா சீரியலில் கதாநாயகிக்கு தங்கை தீபிகா வேடத்தில் நடித்து வந்தவர் அக்ஷிதா. இவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை ஆட்சிதா அசோக் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு போன்ற சீரியலில் நடித்து வருகிறார்.
அன்பே வா சீரியலில் மீண்டும் ஒரு நடிகை மாற்றம்:
இந்நிலையில் தற்போது அன்பே வா சீரியலில் இருந்து வாசுகி கதாபாத்திரத்தில் அதாவது கதாநாயகனின் அக்காவாக நடித்து வந்தவர் விலகி இருக்கிறார். தற்போது புதிய வாசுகியாக சீரியல் நடிகை மகாலட்சுமி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக மீடியாவிற்குள் நுழைந்தவர் மகாலட்சுமி. பின் இவர் அரசி, தாமரை, வாணி ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை விட இவர் தன்னுடன் நடித்த நடிகர் ஈஸ்வர் உடன் தொடர்பில் இருப்பதாக குறித்த செய்திகள் மூலம் தான் அதிக அளவில் பேமஸ் ஆனார் என்று சொல்லலாம்.
நடிகை மகாலக்ஷ்மி சின்னத்திரை பயணம்:
இது குறித்த செய்திகள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் நடிகர் ஈஸ்வரனின் மனைவி ஜெய ஸ்ரீ அவர்கள் மகாலட்சுமி மீதும் தன்னுடைய கணவர் ஈஸ்வர் மீதும் போலீஸ், மீடியா என்று புகார் அளித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தும் மகாலட்சுமி தன்னுடைய கேரியரை விடாமல் நடித்து வருகிறார். இவர் பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது அன்பே வா சீரியலில் வாசுகி கதாபாத்திரமும் வில்லி கதாபாத்திரமாக மாறி கொண்டிருப்பதால் இதில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வாசுகி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஏன் விலகினார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை.