விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் நடிகர் ப்ரஜின் பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவேளிக்கு பின்னர் “அன்புடன் குஷி” என்ற புதிய தொடரில்நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு நடிகர் ப்ரஜின் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக இவர் நடித்து வரும் “அன்புடன் குஷி” சீரியல் காதல் கதை அம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.
இந்த சீரியல் குறித்து ப்ரஜின், வடசென்னையில் ஒரு சின்ன வீட்டில் குடும்பத்தோடு வசிக்கிர கதாபாத்திரம் தான் என்னுடையது. அன்பு மட்டுமே நிறைந்து இருக்கும் ஒரு அழகான கூட்டுக்குடும்பம். அந்த ஏரியாவில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு. அப்படி ஒரு கதாபாத்திரம். அதே ஏரியாவில் வசிக்கும் வட இந்தியப் பொண்ணு தான் குஷி. அவருடன் காதல் ஏற்பட, எப்படி இருவரின் கலாச்சாரமும் ஒத்து போகுது,எப்படி இருவரும் கரம் பிடித்தார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். இது வித்தியாசமான கதை களம் கொண்ட சீரியல். காமெடி, காதல், குடும்பம் என கமர்ஷியல் ஆகவே சீரியல் நகரும்.
குஷி கதாபாத்திரத்தில் நடிப்பவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த கதாபாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 3000 புகைப்படங்களை பார்த்து தான் ஆடிசன் பண்ணோம். இவர் இந்த கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கும் என்று தான் ஓகே சொன்னார் இயக்குனர். இவர்கள் தமிழுக்கு புதுசுஇந்த ஆனால், முதல் நாளே இரண்டு பக்க தமிழ் டயலாக்குகளை மனப்பாடம் பண்ணி பேசினாங்க.
என்னுடைய மனைவிக்கும் அவர்களை பிடித்து இருக்கு. உங்களுடைய ஜோடி சூப்பர் என்று என் மனைவி கூறினாள். அதுமட்டுமில்லாமல் அவங்க ரொம்ப அழகாக இருக்காங்க என்றும் பாராட்டினார். என் மனைவி எப்போதும் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்ட மாட்டார்கள். அதுவும் ஒரு பொண்ணு இன்னொரு பெண்ணை பாராட்டுவது பெரிய விஷயம் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் குஷி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மான்ஷி ஜோஷிக்கு பதிலாக தற்போது வேறு ஒருவர் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் அரவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய குஷியாக நடிக்க உள்ள நடிகையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.