அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் – சமீபத்தில் வெளியான படத்தை பரிந்துரைத்த அன்புமணி

0
1722
Anbumani
- Advertisement -

கருமேகங்கள் கலைகின்றன படம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிற்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சன். இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும், இவர் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், நடித்து உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு தான் படம் இயக்குவார்.

- Advertisement -

தங்கர் பச்சன் திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தந்தை-மகனுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட படம்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை பார்க்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

அன்புமணி ராமதாஸ் டீவ்ட்:

பின் படத்தை பார்த்துவிட்டு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இயக்குநர் தங்கர் பச்சன் படைத்திருக்கும் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில் இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது.

படம் குறித்து சொன்னது:

இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும். இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த இயக்குநர் தங்கர் பச்சன், அன்புமணிக்கு நன்றி என்று பதில் அளித்து இருக்கிறார்.

Advertisement