தேர்தலில் இவங்க தான் ஜெயிப்பாங்க, IPL வின்னர் இந்த டீம் தான் – ஜோதிடம் சொன்ன கோலங்கள் சீரியல் நடிகர்.

0
202
- Advertisement -

சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் இயக்கிய தொடர்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்று தான் கோலங்கள். இந்த தொடர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். இந்த சீரியல் தான் நடிகை தேவயானிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. இந்த சீரியல் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.  

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் மனோ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீதர். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதோடு இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு தான் இவருக்கு பிற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. பின் சில ஆண்டுகளாகவே இவரை சின்னத்திரை சீரியலில் பார்க்க முடியவில்லை. என்ன செய்கிறார்? எங்கே போனார்? என்று தெரியாமல் இருந்தது.

- Advertisement -

நடிகர் ஸ்ரீதர் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் விசாரித்த போது தற்போது இவர் ஜோதிடம் பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஸ்ரீதர், கோலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் சின்ன பையன். அப்போது எனக்கு நடிக்க வருமா? என்ற தயக்கத்தோடு தான் ஆடிஷனுக்கு போனேன். இருந்தாலும் நான் நடிக்க தேர்வானேன். சீரியலில் கமிட்டான பிறகு திருச்செல்வம் சாருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் நான் முறையாக கூத்தப்பட்டறையில் நடிக்கவும் கற்றுக் கொண்டேன்.

சீரியல் அனுபவம்:

அந்த சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இப்போ நான் நடிப்பை விட்டு கொஞ்சம் விலகி இருந்தும் நடிகனாக என்னை அடையாளம் காட்டுவது அந்த ஹிட் சீரியல் தான். கோலங்களுக்கு பிறகு நான் ஒரு 15 சீரியல்களில் நடித்தேன். இருந்தாலும், என்னை பார்ப்பவர்கள் எல்லோருமே கோலங்கள் கதாபாத்திரத்தை குறித்து தான் பேசுகிறார்கள். டிவி சீரியல் ஆர்ட்டிஸ் உடைய வாழ்க்கை நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது.

-விளம்பரம்-

நடிப்பு குறித்து சொன்னது:

ஒரு சீரியல் ஹிட்டானால் 5 வருடம் அந்த புகழ் இருக்கும். அவ்வளவுதான் அடுத்த வாய்ப்பு அதே அளவுக்கு கிடைக்குமா என்பது தெரியாது. சீரியல் வாய்ப்பு இல்லாத நேரத்தில் நான் ஜோதிடம் பார்ப்பதில் கவனம் செலுத்தினேன். எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம். இது என்னுடைய அப்பாவிடம் இருந்து தான் வந்தது. அவர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே கிடைக்கும் நேரங்களில் சிறிய அளவு ஜோதிடம் பார்த்து வந்தார். ஆனால், நான் ஜோதிடத்தில் அதிக ஈடுபாட்டை காண்பித்தேன்.

ஜோதிடம் குறித்து சொன்னது:

சீரியல் நேரத்தில் ஜோதிடம் பார்த்து வந்ததும் வெளியே தெரிய ஆரம்பித்தது. நானும் சோசியல் மீடியாவில் இருக்கிறேன். ஆனால், வாய்ப்புக்காக ரில்ஸ் போட்டுட்டே இருக்கணும் என்றெல்லாம் நினைப்பதில்லை. அதனாலே என்னவோ நடிப்புக்கும் எனக்கும் இடையே ஒரு இடைவெளி வந்துவிட்டது. இருந்தாலும் நடிப்புக்கான முயற்சியை நான் இன்னும் கைவிடவில்லை. நடிப்பில் நான் நிச்சயம் பேர் வாங்குவேன் என்று ஜாதகம் சொல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி தான். தமிழகத்தில் 35 சீட்டுகள் வரை ஆளுங்கட்சிக்கு கிடைக்கும். அதேபோல் ஐபிஎல் சன்ரைசஸ் ஹைதராபாத் கப் அடிக்கும் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement