நோ பால் சர்ச்சை : தோனிக்கு எதிராக கேள்வி கேட்ட பாவனா.! ரெண்டு வருஷம் கிரிக்கெட் பாத்தா பெரிய ஆளோ.!

0
1139
Dhoni
- Advertisement -

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

மேலும், ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. இந்த நிலையில் தோனியை குறை கூறி இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஒன்றில் நோ பாலுக்காக மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார் தோனி . கூல் தோனியின் கோபத்தை ஆச்சர்யத்துடனும் மிரட்சியுடனும் பார்த்தனர்.  இந்த நிலையில், ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக ஐபிஎல் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்தது.

-விளம்பரம்-

தோனிக்கு அபராதம் விதைக்கப்பட்டதை பலரும் கண்டித்து வரும் நிலையில், தொகுப்பாளினி பாவனா, நோ பாலுக்காக எதற்கு தோணி மைதானத்திற்குள் சென்றார். அது ஐபிஎல் விதியின்படி தவறு அதை ஏன் யாரும் கேட்கவில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் பலரும் பாவனாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement