`சூப்பர் சிங்கர்' சீசனில் ஆளைக் காணவில்லையே எனப் பார்த்தால், `கிடைத்த கேப்பில் கிடா வெட்டிடலாம்' எனப் புதிய ஒரு இனிஷியேட்டிவாக `மாஷ் சாங்' ரிலீஸில் இறங்கியிருக்கிறார். ஒரு லைக் போட்டுவிட்டு அப்படியே போன் போட்டோம்.
சினிமாவுல டூயட் பாடுவீங்கனு நினைச்சா, என்னது இது?
``புது முயற்சியா இதுல இறங்கி ஃபர்ஸ்ட் சாங் வெளியிட்டிருக்கிறேன். தமன்னாவும், ஆர்.ஜே.பாலாஜியும் வெளியிட்டாங்க. மாதவன்ல இருந்து பல திரைப் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்திக்கிட்டு இருக்காங்க. மாதவன், `` `சூப்பர் சிங்கர்' எக்ஸ்பீரியன்ஸை வெச்சே கண்டிப்பா ஒரு நாள் பாடுவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, பாடலோட ஆடலுமா? எனக்கு இது இன்ப அதிர்ச்சி"னு சொன்னார்.




