துப்பாக்கிச் சுடுதல்.! மூணு நாய்க்குட்டி, ரெண்டு பூனைக்குட்டி.!நானும் தமிழ்ப் பெண்! பிக் பாஸ் மமதி

0
2251
Bigg-boss-mamathi
- Advertisement -

அழகுத் தமிழ். தனித்துவ தேன் குரல். புன்னகைச் சிரிப்பு… என்று தனித்துவ அடையாளங்களுடன் மிளிர்பவர், மமதி சாரி. தொலைக்காட்சி தொகுப்பாளராக கலக்கியவர், சின்ன இடைவெளி எடுத்து அமைதியானார். தற்போது, சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் திடீர் வரவாக வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இவருடன் உரையாடத் தொடங்கிய சில விநாடிகளிலேயே நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.

-விளம்பரம்-

Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House

- Advertisement -

திடீரெனப் பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன?”
“சன் டிவி ‘செல்லமே செல்லம்’தான் தொகுப்பாளராக என் கடைசி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி 2015-ம் ஆண்டு முடிஞ்சது. மூணு வருஷமாச்சு. இந்த இடைப்பட்ட காலத்தில் குடும்பம், பயணம் என எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்தினேன். பொதுவா வாழ்க்கை என்பதே பயணம்தான். சந்தோஷம், துக்கம் என எந்தக் கடந்த நிகழ்வுகளும் திரும்ப வராது. அதனால் ஒவ்வொரு நிமிஷத்தையும் அர்த்தமுள்ளதா அமைச்சுக்கிட்டேன். பழைய மெட்ராஸின் நிலை உள்பட ஐந்து புத்தகங்களை எழுதினேன். சில ஸ்போர்ட்ஸ் சேனல்களில் வர்ணனை செய்தேன். மறுபடியும், திரைக்கு முன்னாடி வரலாம்னு முடிவெடுத்தேன். இம்முறை கொஞ்சம் வித்தியாசமா ஆரம்பிப்போம்னு நினைச்சேன். ‘வாணி ராணி’ வாய்ப்புக் கிடைச்சது. நடிப்பில் களமிறங்கிட்டேன்.”

mamathi chari

-விளம்பரம்-

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்…”

“மூணு நாய்க்குட்டி, ரெண்டு பூனைக்குட்டி வளர்க்கிறேன். இந்தச் செல்லங்கள்தான் என் குழந்தைகள். என் வீட்டில் பல வருஷமாக வேலை செய்யும் செல்வி அக்கா மற்றும் அவரின் பிள்ளைகளும் என் குடும்பம். நிறைய படிப்பு, எழுத்து, தமிழ் சார்ந்த பணிகள், துப்பாக்கிச் சுடுதல், உடற்பயிற்சி என ஒவ்வொரு நாளிலும் என் மல்டி டாஸ்க் செயல்பாடுகளை வித்தியாசமாக அமைச்சுக்கிறேன். முன்புபோல தொடர்ந்து மீடியாவுல அதிகம் பயணிக்க ஆவலாயிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் மமதி சாரி.

நீங்க பேசும் தமிழ் ரொம்பத் தனித்துவமா இருக்கு. அதுக்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?”

“நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்புப் போதுமே. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். படிச்சது எம்.ஏ., இங்கிலீஷ். பள்ளியில் தமிழ் படிக்கலைன்னாலும், இயல்பிலேயே தமிழ் மொழி மீது பெரிய பற்று இருந்துச்சு. நிறைய தமிழ்ப் புத்தகங்களையும், தமிழ் சார்ந்த விஷயங்களையும் தேடிப் படிச்சேன். எனக் கணீர் குரலில் பேசும்போது வித்தியாசமாவும் தெளிவாகவும் கேட்கும். அது, பார்வையாளர்களிடம் எளிதாகப் போய்ச் சேர்ந்தது. மேடையில் ஆங்கிலம் கலக்காமல் என்னால் பலமணி நேரம் பேச முடியும். எங்கே போனாலும் ஒரு தமிழராக, தமிழ்ப் பேசுவதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஆனால், தமிழராக இருந்தும் பலரும் சரியா தமிழ்ப் பேசத் தெரியாமல் திணறுவதும், தமிழைப் பேசத் தயங்குவதும் ரொம்பவே வருத்தமா இருக்கு.

Mamathi-Chari-in-Bigg-Boss

ஆங்கரிங்… ஆக்டிங்… எது ரொம்பப் பிடிச்சதா இருக்கு?”

“நிச்சயமா ஆங்கரிங்தான். அந்தப் பணியை ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை ரொம்பவே காதலிக்கிறேன். என் முழு ஈடுபாட்டையும் அதுக்குக் கொடுத்திருக்கேன். இப்போ ஆக்டிங்கையும் காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல சினிமா வாய்ப்புகள் வந்தால் படங்களிலும் ஆக்டிவா நடிக்கத் தயார்.

Advertisement