சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை !

0
3194
manimegalai

சன் மியூசிக் சேனலில் தொகுப்பளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா என இருவர் சூர்யாவின் உயரத்தைப் பற்றி கிண்டல் செய்வது போல பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ‘

Niveditha-Sangeetha

அனுஷ்காவுடன் நடிக்கும் போதே ஸ்டூல் போட்டு நடித்தார் சூரியா, தற்போது அமிதாப் பச்சனுடன் நடிக்கப்போகிறார் அதற்கு எவ்வளவு பெரிய ஸ்டூல் போட்டு நடிக்க போகிறார் என தெரியவில்லை,’ என லைவ் ஷோவில் இருவரும் பேசினார்கள்.

இந்த விஷயத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். இது ஹியூமர் சென்ஸ் இல்லை, முற்றிலுமாக சென்ஸே இல்லாதது போல இருக்கிறது என கண்டனத்தை தெரிவித்தார் நடிகர் விஷால்.

தற்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் இன்னொரு தொகுப்பாளினி மணிமேகலை அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘எவ்ளோ உயரங்கிறது முக்கியம்மில்ல, எவ்ளோ உயர்றோங்கிறது தான் முக்கியம்’ தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் மணிமேகலை.