கேவலமா இருக்கு உங்க மன்னிப்பு, உங்க வீடியோ ஒரு பவர் ஸ்டார் வீடியோ. மதுவந்திக்கு பதிலடி கொடுத்த மோனிகா.

0
36081
Monika
- Advertisement -

கடந்த சில நாட்களாக நடிகை மதுவந்தி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. இவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளார் என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன் மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் மோடி செலுத்தி இருப்பதாக தெரிவித்து இருந்தார். மதுவந்தியின் இந்த பேச்சை கேட்டு நெட்டிசன்கள் கிண்டல், கேலியும் செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக நான் வெளியிட்ட வீடியோவில் நான் ஒரு தப்பு பண்ணிவிட்டேன். நான் அந்த தப்பை செய்து இருக்க கூடாது. இது வந்து human error. இந்த தவறுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு. வேற யாரையும் சொல்ல முடியாது. நான் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.இனிமேல் நான் கொடுக்கும் வீடியோவில் இந்த மாதிரி தவறுகள் வராமல் கவனமாக வீடியோக்களை கொடுக்கிறேன்.

இதையும் பாருங்க : அந்த போட்டவ விடுங்க, கடலுக்கடியில் ஹன்சிகா செய்த இந்த வீடீயோவை பாருங்க.

- Advertisement -

ஆனால், இந்த தருணத்தில் சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இத்தனை நாளாக நான் நல்ல நல்ல பாயிண்டுகளை பல வீடியோக்களில் கொடுத்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் பரப்பவில்லை. இதே வீடியோவில் இது ஒரு தவறை தவிர்த்து மற்ற எல்லா விஷயங்களும் கரெக்டாக தான் சொல்லி இருக்கிறேன்.ஆனால், அதை பற்றி ஏன் கூற வரவில்லை. அப்ப தப்பு செய்தால் மட்டும் தான் நீங்கள் பிரபலம் ஆகுவீர்கள். மேடைக்கு மேடை ஒரு தலைவர் பிட்டு பேப்பரை வைத்து கிட்ட தவறாக பேசி இருக்கிறார்.

இது போல் பல பேர் தவறு செய்து இருக்கிறார்கள். ஆனால், யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. நீங்களும் அதை பற்றி கேட்கவில்லை. ஆனால், நான் என் தப்பை ஒத்துக் கொள்கிறேன். ஏன்னா, நான் ஒரு இந்து. கடவுள் நம்பிக்கை உள்ளவள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் தான் சத்தியத்திற்கும், மனசாட்சிக்கும் பயப்படுவார்கள். நான் என் மனசாட்சிக்கு பயந்து தான் மன்னிப்பு கேட்கிறேன்.கமல் சார் கூட ஒரு படத்தில் சொல்லியிருப்பாரு மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன். நான் பெரிய மனுஷியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : படையப்பாவில் வந்த கார், ஷாலினி தவறவிட்ட வாய்ப்பு. நீங்கள் அறிந்திடாத பல தகவல்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த விடீயோவையும் மீம் கிரியேட்டர்கள் வச்சி செய்து வந்தார்கள். இந்த நிலையில் மதுவந்தியின் இந்த வீடீயோவை தனது பங்கிற்கு வச்சி செய்துள்ளார். பிரபல தொகுப்பாளினியாக மோனிகா, வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்திக்குப் பிறகு இவர் சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வந்தார். பின் சோசியல் மீடியா பக்கம் வந்தவுடன் இவர் சீரியல், சினிமா பக்கம் ஆளையே காணோம். சோசியல் மீடியாவில் சமூக பிரச்சனை, அரசியல் என பல விஷயங்கள் குறித்து தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட தொடங்கினார். இவர் வெளியிட்ட வீடியோவின் மூலம் இவருடைய செய்தி வாசிப்பாளர் வேலைக்கு பிரச்சினை வந்தது. இதனால் மோனிகா வேலையை உதறி விட்டார்.

சமீபத்தில் மதுவந்தி வீடியோ குறித்து விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மோனிகா, நீங்கள் கேட்ட மன்னிப்பு மிகவும் கேவலமாக இருக்கிறது. மேலும், நீங்கள் கேட்ட கேள்விகள் ஒரு பட்சமாக இருக்கிறது. உங்கள் கண்டட் பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு தான் இருக்கிறது என்று கூறி மதுவந்தியை கிழி கிழித்து மதுவந்தியை வச்சி செய்துள்ளார் மோனிகா. அந்த முழு வீடீயோவை நீங்களே பாருங்க.

Advertisement