அந்த போட்டவ விடுங்க, கடலுக்கடியில் ஹன்சிகா செய்த இந்த வீடீயோவை பாருங்க.

0
2793
hansika
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் ‘ஹவா, ஹோய்.. மில் ஹாயா, ஆப்ரா கா தாப்ரா, ஜாகோ, ஹம் கவுன் ஹாய்?” போன்ற சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இதனைத் தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு வெளி வந்த ‘தேசமுதுரு’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் ஹன்ஷிகா மோத்வானி. இது தான் ஹன்ஷிகா மோத்வானி ஹீரோயினாக நடித்த முதல் படமாம். இந்த படத்தை பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Sea bob . #throwback #seabob ???????????

A post shared by Hansika Motwani (@ihansika) on

இதில் தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ‘தேசமுதுரு’ படத்துக்கு பிறகு அடுத்தடுத்து சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஹன்ஷிகா மோத்வானி. ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்தார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

இதையும் பாருங்க : படையப்பாவில் வந்த கார், ஷாலினி தவறவிட்ட வாய்ப்பு. நீங்கள் அறிந்திடாத பல தகவல்கள்.

- Advertisement -

ஆகையால், அடுத்ததாக கோலிவுட் சினிமாவிலும் என்ட்ரியானார். 2011-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ‘மாப்பிள்ளை’. இதில் பிரபல நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்திருந்தார். ‘மாப்பிள்ளை’ படத்துக்கு பிறகு ‘எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மீகாமன், ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, புலி” என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் டாப் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்ஷிகா மோத்வானி.

கடைசியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்த தமிழ் படம் ‘100’. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்திருந்தார். தற்போது, நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவில் ஹன்ஷிகா மோத்வானி கடலுக்குள் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘‘என்னை கவின் என்று நினைத்து’ தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.

-விளம்பரம்-

‘100’ படத்துக்கு பிறகு ‘மஹா’ மற்றும் ‘பார்ட்னர்’ என அடுத்தடுத்து இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஹன்ஷிகா மோத்வானி. இதில் ஜமீல் இயக்கி கொண்டிருக்கும் ‘மஹா’ படத்தில் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement