விஜய் டிவின் மற்றொரு தொகுப்பாளினியும் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட்டார் ! – ஹீரோ யாருன்னு தெரியுமா ?

0
2557
vijaytv

சின்னத்திரையில் தொகுப்பாளினிகளாக நமக்கு அடிக்கடி தெரியும் முகங்களில் ரம்யாவும் ஒருவர். பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

ramya

இந்த படத்தின் பெயர் ‘சங்கத்தலைவன்’ ஆகும்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நெசவுத் தொழில் பற்றிய படமாக இது உருவாகிறது.

இதில் அறம் படத்தில் நடித்த சுனு லட்சுமி மற்றும் ரம்யா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்த படத்தில் நெசவுத் தொழிலாளியாக ரம்யா நடிப்பார் என் தெரிறது.

உதயம் என்.ஹெச் 4 படத்தின் இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரகனி மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.