பிரியங்கா- மணிமேகலை விவகாரம் குறித்து தொகுப்பாளர் ரஞ்சித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா விவகாரம் தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
மணிமேகலை பதிவு:
அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
பிரபலங்கள் கருத்து:
இதனால் பலரும் பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல தொகுப்பாளர் ரஞ்சித்தும் இது தொடர்பாக அளித்த பேட்டியில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா உடைய ஆதிக்கம் அதிகமாக இருந்ததை நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே தெரியும். இந்த நிகழ்ச்சியை விட்டுப் போன நடுவர் வெங்கடேஷ் பட்டுக்கும் தெரியும்.
தொகுப்பாளர் ரஞ்சித் பேட்டி:
அவர் இருந்திருந்தால் இந்த விஷயத்தை அவர் வேற மாதிரி டீல் செய்திருப்பார். பிரியங்கா- மணிமேகலை இடையே ஈகோ தான் அதிகமாக இருக்கிறது. நீ ஆங்கராக இருந்தால், நீ சொன்னால் நான் கேட்கணுமா என்று பிரியங்கா நினைக்கிறார். 15 ஆண்டுகளாக அவர் சேனலில் இருப்பதால் யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை. இந்த பிரச்சனை போன வாரம் திவ்யா துரைசாமி எலிமினேஷன் ஆனதிலிருந்து தான் அதிகமாக வந்தது. அந்த நேரத்தில் தான் மணிமேகலையை வேலை செய்ய விடாமல் பிரியங்கா தடுத்து இடையூறு கொடுத்திருந்தார்.
ப்ரியங்கா குறித்து சொன்னது:
இதே விஜய் டிவி சேனலுக்கு சீனியர் ஆக இருந்த டிடி நினைத்திருந்தால் பிரியங்கா இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. டிடி சேனலில் இருந்து விலகி விட்டுக் கொடுத்ததால் தான் பிரியங்கா இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். அதனால் தான் இத்தனை ஆண்டு காலம் அவரால் ஒரே சேனலில் காலத்தை ஓட்ட முடிகிறது. குறிப்பாக, இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இர்ஃபான் உடன் சேர்ந்து ப்ரியங்கா, அக்கா தம்பி பாசத்தை பொழிவதாக இரண்டு பேருமே பண்ணும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. அதை பார்க்க எரிச்சலாக தான் இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.