டாப் ஸ்டார் பிரசாந்த், ‘அந்தகன்’ படத்தின் மூலம் கம்பாக் கொடுத்தாரா? இல்லையா?- முழு விமர்சனம் இதோ

0
384
- Advertisement -

பல வருடங்களுக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழில் நடித்து வெளியாகி இருக்கும் படம் தான் ‘அந்தணன்’. இப்படத்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்திருக்கிறார். மேலும் படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆன இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நடிகர் பிரசாந்தின் கம்பேக் படமான அந்தகன் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

கதையில் நடிகர் பிரசாந்த் (கிரிஷ்) ஒரு பியானோ கலைஞர். இவர் மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவும், பணம் சம்பாதிக்கவும், தான் ஒரு பார்வையற்ற இசை கலைஞர் என உருமாறி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பார்த்த நடிகர் கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்ய தனது வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால், அங்கு கிரிஷ் சென்று பார்க்கும் போது, அங்கு கார்த்திக்கின் மனைவி சிமி (சிம்ரன்) அவரைக் கொன்று விட்டு, வேறு ஒருவருடன்(சமுத்திரக்கனி) உல்லாசமாக இருக்கிறார். அதைப் பார்த்த கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார். பின் கார்த்திக்கின் மனைவி சிமிக்கு, கிரிஷ் பார்வை இல்லாதவர் போல் ஊரை ஏமாற்றுகிறார் என தெரிய வருகிறது. அதற்குப் பிறகு நடக்கும் சுவாரஸ்யம் தான் மீதிக்கதை.

- Advertisement -

இந்தப் படத்தை இயக்குனர் தியாகராஜன் சிறப்பாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் பிரசாந்த் அப்படியே கண் தெரியாதவர் போல் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது. நடிகர் கார்த்திக் இறக்கும் காட்சிகளில் எல்லாம் நடிகர் பிரசாந்தின் பெர்ஃபார்மன்ஸ், உண்மையில் நான் ஒரு டாப் ஸ்டார் என்று நிரூபித்து விட்டார். மேலும் இப்படத்தில் நடிகை சிம்ரன் எனக்கு வெறும் டூயட் மட்டும் பாட தெரியாது, நான் அதிரடியாக கூட நடிப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

அதேபோல் கோவை சரளா, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் என அனைவருமே தூள் கிளப்பி உள்ளார்கள். முதல் பாதி மெதுவாக சென்றாலும், நடிகர் கார்த்திக்கின் கொலைக்குப் பிறகு படத்தில் விறுவிறுப்பில் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், டாப் ஆங்கிள் காட்சிகள் எல்லாம் பிரமாதமாக எடுத்துள்ளார். இப்படத்தின் மிகப்பெரும் பலம் இசை என்பதை சந்தோஷ் நாராயணன் இன்னும் உணர்ந்து இசையமைத்திருக்கலாம்.

-விளம்பரம்-

நிறை:

பிரசாந்தின் நடிப்பு சிறப்பு

கதாபாத்திரங்கள் தேர்வு

ஒளிப்பதிவு அருமை

திரைக்கதை திசை திரும்பாமல் செல்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்

இது ஒரு ரீமேக் என்பதால், ஹிந்தியில்பார்த்தவர்களுக்கு இப்படம் போர் தான்.

மொத்தத்தில் பிரசாந்தின் அந்தணன் ‘அற்புதம்’ தான்.

Advertisement