எம் பியான முன்னாள் காவலர்.! தனது உயர் அதிகாரியை கண்டதும் சல்யூடுட்.! வைரல் புகைப்படம்.!

0
1568
- Advertisement -

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான மாநிலத்தை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக கட்சியினரால் கால் பதிக்க முடியாது சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் என்ற தொகுதியில் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்று அமைச்சராகியுள்ள சம்பவம் மிகவும் கவனிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரண்டலா மாதவ் என்ற போலீஸ் அதிகாரி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர், கட்சியில் இணைவதற்கு முக்கிய காரணம் தெலுங்குதேச கட்சியின் முன்னாள் அமைச்சரான ஜெசி திவாகர் ரெட்டிஎன்பவருடன் ஏற்பட்ட கடும் மோதல் தான்.

- Advertisement -

மாதவ் போலீஸ் அதிகாரியாக இருந்த அந்த சமயத்தில் இருவரும் மாறி மாறி நேருக்கு நேராக சவால்களையும் விட்டுள்ளனர் அமைச்சரான திவாகர் ரெட்டி காவல் துறையினரை மிகவும் அவதூறாக பேசியதால் கோபமடைந்த காவல் அதிகாரி மாதம் போலீசை யார் கேவலமாக பேசினாலும் அவர்களுக்கு துண்டிக்கப்படும் என்று பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related image

அதன் பின்னர் திவாகர் ரெட்டி, மாதாவிற்கு ‘தைரியம் இருந்தால் காக்கி சட்டையை கழட்டிவிட்டு என்னுடன் மோதட்டும் ‘ என்று சவால் விட உடனே தனது போலீஸ் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்துள்ளார் மாதவ். அந்த சமயத்தில் முதல் போலீஸ் அதிகாரியான மாதவன் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்தார் இந்த நிலையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேச கட்சியின் கிருஷ்ணப்பா நிமலா என்பவரை வி1,40,748 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சராக தேர்வாகியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for hindupur

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது தான் பணிபுரிந்த உயர் அதிகாரி ஒருவருக்கு முன்னாள் காவலாளியான மாதவ் சல்யூட் செய்யும் புகைப்படம் ஒன்று மிகவும் வைரலாக பரவியது. இதுகுறித்து முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதய அமைச்சருமான மாதவ் தெரிவிக்கையில் ‘ நான் என்னுடைய உயர் அதிகாரியை மிகவும் நேசிக்கிறேன். எங்கள் இருவர் மத்தியிலும் பரஸ்பர மரியாதை இருப்பதால் தான் முதலில் நானே அவருக்கு சல்யூட் அடித்தேன்’ என்று கூறியுள்ளார் மாதவ்

Advertisement