அந்த படம் சரியாக ஓடாததால் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை..! தனுஷ் பட நடிகை

0
1136
Amyra Dastur

2013 ஆம் ஆண்டு “இஷாக்” என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.இதுவரை தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் ஹிந்தியில் ஒரு சில பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் அமிரா தஸ்துர்.

Anegan

தனது முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் 2015 தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படுத்தி நடித்தார். ஆனால் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் தான் முதலில் அறிமுகமான ஹிந்தி மற்றும் தமிழ் படங்கள் இரண்டுமே ஓடவில்லை.

இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த அமிரா தஸ்துர் சில நாட்கள் வீட்டின் உள்ளேயே முடங்கிக் கிடந்தேன் என்று கூறியுள்ளார். இதுபற்றி சமீபத்தில் அவர் கூறுகையில் ” நான் ஹிந்தியில் அறிமமுகமான முதல் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், எனக்கு அப்படத்தில் நல்ல பெயர் கிடைத்தது, இதனால் நான் ,மாடலிங் துறையில் இருந்து கொண்டே தொடர்ந்து நடித்து வந்தேன் “

anegan-actress-amyra-dastur

ஆனால் நான் நடித்த முதல் இரண்டு படங்களுமே தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மிகவும் மன வேதனை அடைந்தேன். இதனால் எனது பெற்றோர்கள் எனது மனதை மாற்ற என்னை தாய்லாந்திற்கு அழைத்து சென்று விட்டனர். அதன் பிறகு சிறுது நாட்கள் நான் வெளியில் எங்கும் செல்லவில்லை,அதன் பின்னர் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகே நான் எனது மாடலிங் துறையை கூட தொடந்தேன் ” என்று கூறியுள்ளார்