மொட்டை அடித்துக்கொண்ட தனுஷ் பட நடிகை ! யார் ..ஏன் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
1431

இந்த காலத்தில் சாதாரண பெண்களே தனது தலையை மொட்டையடிக்க யோசிக்கும் நிலையில்.படத்தின் வெற்றிக்காக மொட்டையடித்துள்ளார் ஒரு மலையாள நடிகை.48 வயதாகும் லேனா என்னும் மலையாள நடிகை மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி,மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடித்தவர். மேலும் சிறு வயது நடிகர்கள் முதல் பிரிதிவிராஜ் வரை அம்மாவாக நடித்துள்ளார்.

1998 சினிமாவில் நடித்து வரும் லேனா இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அதில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.சமீபத்தில் இவர் நடித்துள்ள இரா என்ற த்ரில்லர் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது இதில் வழக்கறிஞராக நடித்திருந்தார் லேனா. இதனால் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பழனியில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்று மொட்டையடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த லேகாவை ஒரு கேரள ரசிகர் இது எந்த படத்திற்கான மொட்டை என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.இதற்கு லேனா சற்றும் கோவப்படாமல் பழனி முருகனை மறந்து விட்டீர்களா என்று மிகவும் சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.