என்ன ஆடுற ? அங்காடி தெரு ஹீரோவை வெளுத்து வாங்கும் வசந்த பாலன். வைரலாகும் வீடியோ.

0
3784
angaadi-Theru

தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் அவர்கள் இணைந்து தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி, ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்னையில் உள்ள பிரபல கடையில் பணிபுரியும் வறுமையான கிராமத்து இளைஞர்கள் படும் கஷ்டத்தை தோலுரித்து காட்டியது இந்த படம்.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கதை. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிளேயே எடுக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் சொல்லித் தந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வசந்த பாலன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் முக்கியமான இயக்குனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஒரே நாளில் வசூலில் அடிச்சி தூக்கிய திரௌபதி. இந்த விஷயத்தில் 30 வருடத்தில் இது தான் முதல் முறை

இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து உள்ளார். அதற்குப் பிறகு ஆல்பம், வெயில் அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் அங்காடி தெரு படத்தில் இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் சொல்லித் தந்து உள்ளார். அது உன் பேரை சொல்லும் என்ற பாடலுக்கு நடனம் சொல்லி தந்து உள்ளார்.

-விளம்பரம்-

அப்போது நடிகர் மகேஷ் அவர்களுக்கு நடனம் சரியாக வராததால் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் ஹீரோவை அடி அடி என்று வெளுத்து வாங்கி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இந்த அளவிற்கு மகேஷ் உழைத்து உள்ளாரா?? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது.

Advertisement