இந்த நிலைமையிலும் வீடியோ கால் பண்ண சொல்லி கேக்குறாங்க – சிந்து வேதனை

0
548
sindhu
- Advertisement -

அங்காடி தெரு என்ற படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்தும் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் ஒரு புற்றுநோயாளி என்று கூட பாராமல் ஒருவர் தன்னிடம் பணத்திற்காக கொச்சை வார்த்தைகளினால் பேசியிருப்பது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார் நடிகை சிந்து. அவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

- Advertisement -

இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி, கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

புற்றுநோய் :

கொரோன காலத்தில் சரியான நேரத்திற்கு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த சிந்து அதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்தும் குணம் அடையாமல் இருக்கிறார். புற்றுநோய் அதிகமாக பரவியதால் காரணமாக இவருக்கு மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் காயம் ஆறாமல் இருப்பதினால் சில படங்களிலும் சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைத்தும் உடல்நலக் குறைவு காரணமாக நடிக்க முடியாமல் இருப்பதாக சமீபத்தில் கொடுத்திருந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சினிமா பிரபலங்கள் உதவி :

மேலும் தன்னுடைய மகளின் கணவர் சிறு வயதிலேயே மாரடைப்பு காரணமாக காலமானதால் கணவனை இழந்து தவிக்கும் தன்னுடைய மகளுக்கு ஆறுதலாகவும் அவரின் குழந்தைகளை சிந்து தான் காப்பற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்த்து பல விடியோக்கள் மூலம் தன்னுடைய நிலைமையை கூறியதன் மூலம் தற்போது லாரன்ஸ், மனோபாலா, கோவில் சரளா போன்ற சினிமா நட்சத்த்திங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

கொச்சையாக பேசிய நபர் :

இப்படிபட்ட நிலையில் தான் சமீபத்தில் இவர் கொடுத்த நேர்காணலில் ஆதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது இவருடைய நிலைமையை அறிந்த ஒருவர் ஆறுதல் கூறியவாறு வீடியோ காலிற்கு வர அழைத்துள்ளார். அது எதற்கு என நடிகை சிந்து கேட்க ஒரு பக்கம் மார்பகத்தில் தான் புற்றுநோய் உள்ளது எனவே மறுபக்கத்தை காட்டு உனக்கு 5 லட்சம் தருகிறேன் என்று மிகவும் கேவலமாக பேசினார் என கண்ணீர் மல்க தெரிவித்தார் நடிகை சிந்து.

Advertisement