அஜித் சார் ரொம்ப பிடிக்கும் ஆனால், விஜய்….! என்னை அறிந்தால் அனிகா ஓப்பன் டாக்

0
5319

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல் அஜித் மாஸாக கலக்கியிடுப்பார். அந்த படத்தில் தல அஜித்துக்கு மகளாக ஒரு குழந்தை வரும். அந்த குழந்தையின் பெயர் அனிகா. ஆனால், தற்போது அனிகா குழந்தை இல்லை. நன்றாக வளர்ந்துவிட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனிகா. 2010ல் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். 2013ஆம் ஆண்டு ‘5 சுந்தரிகள்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக கேரள அரசின் ஸ்டேட் பிலிம் விருதைப் பெற்றார்.

தற்போது, 8ஆவது மட்டும் படித்து வரும் அனிகா, சமீபத்தில் இவர் வெளியிட்ட படங்கள் வைரலாக ரசிகர்களைக் கவர்ந்தது. இதனால் மீண்டும் அனைவரது பார்வைக்குத் திரும்பியுள்ளார்.

- Advertisement -

மேலும், நேற்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வந்த அவர், ஃபாலோவர்சின் கேள்விக்கு பதில் அளித்தார். இதில் தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் யார் எனக் கேட்ப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலானது,
‘அஜித் சார் தான் பிடிக்கும், எனக் கூறினார். மேலும், தளபதியைப் பிடிக்காதா எனக் கேட்டதற்கு,

விஜயையும் பிடிக்கும் , அவரது டான்ஸ் ரொம்ப பிடிக்கும், ஆனால், அதனை விட அஜித் சாரைத் தான் எனக்குப் பிடிக்கும். எனக் கூறினார் அனிகா.

-விளம்பரம்-
Advertisement