பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க.ஆனாலும் – தான் அணியும் ஆடை குறித்த விமர்சனங்கள் குறித்து குட்டி நயன் கொடுத்த பதிலடி

0
311
anika
- Advertisement -

தனது ஆடை பற்றிய மோசமான விமர்சனத்திற்கு குட்டி நயன்தாரா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் கூறி செல்லமாக அழைத்து வருகின்றனர். அதன் பின் அனிகா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

அனிகா குறித்த தகவல்:

இவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்துள்ள படம் புட்ட பொம்மா. இப்படம் மலையாளத்தில் வெளியான கப்பேலா என்ற படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் மலையாளத்தில் உருவாகி இருந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அனிகா படங்கள்:

அந்த வகையில் தற்போது இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் pt சார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் தான் இயக்குகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதை அடுத்து இவர் தனுஷின் ஐம்பதாவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார்.

-விளம்பரம்-

அனிகா பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இது குறித்து சிலர் மோசமான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிகா, சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விஷயங்களை சந்தித்து தான் வருகிறார்கள்.

அனிகா கொடுத்த பதில்:

நான் கிளாமராக டிரஸ் போடுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். தப்பான விமர்சனங்கள் வருவதை கண்டு கொள்ளக்கூடாது. அது நம்முடைய வாழ்க்கையின் உடைய ஒரு பகுதி தான். எப்படி டிரஸ் பண்ணினாலும் தப்பா பேசுறவங்க தப்பா தான் பேசுவாங்க. இருந்தாலுமே சில மோசமான விமர்சனங்கள் என்னை ரொம்பவே பாதிக்கும். நானும் மனுஷி தானே என்று பேசி இருக்கிறார்.

Advertisement