தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : எப்போ கைது பண்ண போறீங்க – கடுப்பாகி பிரபல நடிகை போட்ட பதிவு.
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளி வந்தனர்.சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளி வந்தனர்.
இளம் வயதிலேயே பல விதமான போட்டோ ஷூட்களை நடத்திய அனிகாவிற்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.