தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. மேலும், சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஜனநாயகன் ரிலிஸ் சர்ச்சை:
விசாரணையில் தணிக்கை குழுவில் 5 நபர்களில் நான்கு பேர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஒருவர் மட்டும் தான் ஆட்சபனை தெரிவித்து இருக்கிறார். நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க சொல்லி தீர்ப்பு கொடுத்தும் மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார். பொங்கலுக்கும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் எல்லோருமே மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ஜனநாயகம் படத்தின் டிரைலரை பார்த்த உடனே பலரும் இந்த படம் பகவந்த் கேசரி உடைய ரீமேக் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

அனில் ரவிபுடி பேட்டி:
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் பகவந்த் கேசரி. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அனில் ரவிபுடி, விஜய் சாருக்கு பகவந்த் கேசரி படம் ரொம்பவே பிடித்திருந்தது. தன்னுடைய கடைசி படத்தினை இயக்குவது தொடர்பாக பேசினோம். அவருக்காக எந்த ஒரு படத்தின் ரீமேக்கையும் செய்ய நான் விரும்பவில்லை. ஒரு நேரடி படம் பண்ணலாம் என்று கதையும் சொன்னேன். அவரை நான் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்து பேசினேன்.

படத்தின் கதை:
அது ஒரு இனிமையான சந்திப்பாக இருந்தது. ஜனநாயகன் படத்துக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள், இடைவெளி, இரண்டாம் பாதியில் சில பகுதிகள் மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். அதனுடைய அடிப்படையே மாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தின் பின்புறத்தில் முழுமையாக மாற்றி ஒரு ரோபோ சார்ந்த அறிவியல் கதையாக கூறியிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு புதுமையான கதைக்களமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.






