காசுக்காக எதுலயும் நடிப்பீர்களா.! சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.!

0
626
Denial and anirudh

தற்போதுள்ள சமூகவலைதள வாசிகள் பயனாளர்கள் அனைவரும் கொஞ்சம் சமூக உணர்வு அதிகமாகவே இருந்து வருகிறது. அதே போல பிரபலங்களும் நடிகர்களும் இருக்கவேண்டும் என்பதையே விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அனிருத் மற்றும் நடிகர் டேனியல் நடித்த குளிர்பானம் விளம்பரம் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இசையமைப்பாளராக விளங்கிவருகிறார் இசையமைப்பாளர் அனிருத். அதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் டேனியல். இவர், அதற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பெயரும் போய்விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து குளிர்பான விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனால் கொந்தளித்துப் போன ட்விட்டர்வாசிகள் காசு கொடுத்தால் எந்த விளம்பரத்திலும் நடிப்பீர்களா என்று இவர்கள் இருவரையும் கடுமையாக சாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் சரி அதன் பின்னரும் சரி , இனி அன்னிய குளிர்பானங்களை பருக மாட்டோம் என்று பல தமிழர்களும் குரல் கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற பொருட்களை பிரபலங்கள் விளம்பரப்படுத்துவது மக்களை கெடுப்பதாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement